பக்கம் : 1200 | | (இ - ள்.) எளியவர் தம்மை - ஏழைகளை, இடைப் பல சொல்லி - இடைப்போதில் இனியன போன்ற வஞ்சகமொழிகள் பலவற்றைக் கூறி, உடைப்பொருள் வெஃகி - அவர்கட்கு உரிய பொருள்களை விரும்பி, ஒறுத்த பயத்தான் - அவற்றைக் கவர்ந்து அவர்களைத் துன்புறுத்திய தீவினையின் பயனாக, முடைப்பொலி மேனியை - ஊனாலே விளக்கமுடைய அவர்களுடைய உடலை, முள் மத்திகையால் புடைப்ப - முள் அமைந்த சம்மட்டியாலே தாக்க, நடுங்கிப் புரள்வர் ஒருசார் - துன்புற்று நடுங்கியவர்களாய்த் தரையில் வீழ்ந்து புரளா நிற்பர் ஒரு பக்கத்தே, () எளியவரைப் பொருளை விரும்பி இன்னல் செய்தவர்களை முட் சம்மட்டியாலே புடைப்ப, அவர் நடுங்கிப் புரள்வர் என்க. | (826) | | 1937. | வெறுப்பன வேசெய்து மேலா யவரைக் குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால் பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே. | (இ - ள்.) வெறுப்பனவே செய்து - பிறர் வெறுத்தற்குரிய தீச்செயல்களையே யாண்டும் செய்து, மேல் ஆயவரை - மேன்மக்களாகிய சான்றோரை, குறிப்பு அல சொல்லிய - தகுதிக்கு ஒவ்வாத வசை மொழிகளைக் கூறி வைத நாவை - தீயவர்களின் நாக்குகளை, கொடிற்றால் - குறட்டாலே, பறிப்பர் - பிடுங்கி, உகிர்வழி - நகக்கண் வழியே, பரிய வயிரமுள்கொண்டு - பருத்த வயிரத்தாலியன்ற முட்களை எடுத்து, ஏறச்செறிப்பர் - நெடிது உள்ளே ஏறுமாறு செருகா நிற்பர், சிலர் - சிலவர், (எ - று.) பிறர் வெறுத்தற்குரிய தீச் செயலையே செய்பவராய்ச் சான்றோரைக் கொடிய சொல்லிய கயவர்களின் நாவினைக் குறட்டாலே பறிப்பர். அவருடைய நகத்திடைய வயிர ஊசியைப் பாய்ச்சுவர் என்க. | (827) | | 1938. | பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக் கரிப்பர் கனல்படு காரக 1லேற்றித் திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய் துரிப்ப ருடலை யவரு மொருபால். | (இ - ள்.) சிறைசெய்து - இந்நரகரைச் சிறைக்கோட்டங்களிலே இட்டு, பொங்கு எரிமாட்டி - கிளருகின்ற தீயைக் கொளுவி, கரிப்பர் - கருக்குவர், கனல்படு கார் அகல் ஏற்றி - தீயிற் காய்ந்த கரிய இருப்பு அகல்களிலே யிட்டு, பொரிப்பர் - பொரித்திடுவர், பலரையும் - பற்பல நரகர்களையும், செக்கு உரலில் பெய்து - செக்காகிய உரல்களினுள்ளே தள்ளி, திரிப்பர் - உலக்கைகளால் ஆட்டா நிற்பர், உடலை உரிப்பர் - உடலின்கட்டோலை உரியா நிற்பர், அவரும் ஒருபால் - அத்தகையோரும் ஒரு பக்கத்தே உளர், (எ - று.) | |
| (பாடம்) 1 லெற்றித். | | |
|
|