பக்கம் : 1202 | | | 1941. | 1சாவ நலிந்திருடந் தண்ணீர்ப் 2பிணிபெரி(து) ஆவென் றலறு மவரையரு நஞ்சின் வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு நாவு மழுக நரல்வ ரொருசார் | (இ - ள்.) தண்ணீர்ப்பிணி பெரிது - நீர் வேட்கையாலாய துன்பம் மிக்கது, ஆ - ஐயகோ, சாவ நலிந்திடும் என்று - எம்மை உயிர்போம்படி துன்புறுத்துகின்றதே என்று, அலறும் அவரை - அலறி அழுகின்ற அந்நரகரை, அருநஞ்சின் வாவிகள் காட்டலின் - மாற்றுதற்கு அரிதாகிய கொடிய நச்சுத்தன்மையுடைய குளங்களைக் காட்டுதலாலே, மண்டி - அந் நஞ்சுடைய குளங்களில் விரைந்து சென்று, மடுத்து உண்டு - ஆர்வத்தோடு அந்நீரை வாய்மடுத்துப் பருகி, நாவும் அழுக - தம் நாவுகளும் அழுகிவிட, ஒருசார் நரல்வ - ஒரு பக்கத்தே அழா நிற்பர், (எ - று.) சாமாறு வருத்தும் நீர் வேட்கையாலே அலறுவோரை நஞ்சின் வாவிகள் காட்டலின் மண்டி உண்டு நாவுமழுகிவிட அழாநிற்பர் என்க. | (831) | | 1942. | அழலிவை யாற்றோ மெனவழன் றோடி நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால் 3தழல்வளி தாமே தலைவழி சிந்தக் கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார். | (இ - ள்.) அழலிவை ஆற்றோம் - இந்நெருப்பிடை நிற்றலை இனிப் பொறோம், என - என்று கூறி, அழன்று - மனம் புழுங்கி, நிழல் இவையாம் என நீள்பொழில் ஒடிப்புக்கால் - இவை நமக்கு நிழலாகும் என்று கருதி ஆங்குள்ள நீண்ட சோலைகளினூடே ஓடிப் புகுந்தவிடத்தே, தழல்வளி தாமே - அச்சோலையில் நெருப்புக்காற்று, தலைவழி சிந்த - மேலிருந்து தம் தலையின் வழிச்சொரிய, கழல்வனர் - உய்வோம் என்னும் நம்பிக்கை கழன்றவராய், வீழ்ந்து கரிவர் ஒருசார் - தரையிடை விழுந்து உடல் கருகுவர் ஒரு பக்கத்தே, (எ - று.) அவ்விடத்தேயுள்ள தீக்குப் பயந்து ஓடி நிழலிலே புக்கால் தீக்காற்றுத் தம் தலையிலே சொரிய வீழ்ந்து கரிவர் என்க. | (832) | | 1943. | முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை அல்ல லெனைப்பல வாயிர கோடிகள் எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும். | |
| (பாடம்) 1 சாவாய், சாவா. 2 பிணியெரி. 3 தழல் வழி. | | |
|
|