பக்கம் : 1203 | | (இ - ள்.) முல்லை முகை மலர்த்தாரோய் - முல்லை மலர் மாலையை அணிந்த வேந்தனே, முதற்புரை அல்லல் - நரகத்தின் முதலாவதாகிய இப்பேரிருளில் உழப்பனவாகிய இன்னோரன்ன இன்னல்கள், எனைப்பல ஆயிரகோடிகள் - எத்துணைவகையாகவும் பல்லாயிரக்கோடிகளாகவும், எல்லையில் துன்பம் - முடிவற்ற துயரந்தருவனவாம், கீழ்க்கீழ் புரைபுரை தோறும் - நிரலே இரண்டாம் புரைமுதலாக அடுத்தடுத்துக் கீழே உள்ளனவாகிய புரைகள் தோறும், இவற்றின் இருமடி புல்லினர் - இவையிற்றைப் போன்று ஒவ்வொன்றினும் இவ்விரண்டு மடங்கு பெருக நுகர்வர், (எ - று.) தாரோய்! நரகத்தின் முதற்புரையின்கண் உள்ளோர் அல்லல்கள் இவை போல்வன எண்ணிறந்தனவாம், கீழ்க்கீழ் நரகங்களின் அவ்வின்னல் மிகும் என்றார் என்க. | (833) | | 1944. | விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும் அளவு மவர்கண் முறையும் பிறவும் அளவில கீழ்க்கீ ழிரட்டி 1யறைந்தேன் உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே. | (இ - ள்.) விளிவு இல் துயரொடு - முடிவில்லாத துயரத்தோடே, மேல் பொங்கி வீழும் அளவும் - மேலே எழுந்து மீண்டும் விழுந்துழலும் நரகங்களின் அளவைகளும், அவர்கள் முறையும் - அந்நரகத்தார் நுகரும் வகையும், பிறவும் - இன்னோரன்ன பிறசெய்திகளும், கீழ்க் கீழ் இரட்டி அளவில - கீழ்ப்போகப் போக ஒன்றனுக்கு ஒன்று இருமடியாய் மிகும் இன்னல் அளவிறந்தனவாம், உளர் ஒளிஞானம் அஃது ஒன்றும் ஒழித்தே - கிளர்தலையுடைய நன்ஞானம் ஒன்றும் நிற்க, பிறவற்றை ஒருவாறு, அறைந்தேன் - கூறினேன், (எ - று.) கதியும் கதியினுள் துப்பும், துப்பின் விதிசெய்வினையும் என முன்னர்த் தொகுத்துக் கூறியவற்றை இதுகாறும் வகுத்துரைத்தேன், என்றார், வினைவெல்வகையும் வீட்டது மாண்பும் என்னும் இரண்டனையும் ஈண்டு ஞானம் என்னும் ஒன்றினடக்கி, ஞானம் ஒன்றும் நிற்க ஏனைய கூறினேன் என்றார். | (834) | | 1945. | பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும் செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும் நையா நரக ரிடமிவை நாறினும் உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே. | |
| (பாடம்) 1 பிறந்தே, மறந்தே. | | |
|
|