பக்கம் : 1204
 

     (இ - ள்.) பெய்யா அருநஞ்சும் - பிறராற் பெய்யப்படாது இயல்பின் உளவாகிய
நச்சுப்பொய்கைகளும், பேர் அழல் குட்டமும் - பெரிய தீக்குழிகளும், செய்யாக் குழிகளும் -
இயல்பானுளவாகிய கும்பிக்குழிகளும்,

     சீநீர்த் தடங்களும் - சீழே நீராய் நிறைந்த குளங்களுமாகிய, நையா நரகர் இடம்
இவை - துயரத்தாலே உடலும் உளமும் நையும் நரகர் வதியும் இவ்விடங்களின், நாறினும் -
தீநாற்றம் பட்டாலும், ஓசனைக்கண்ணே - நான்கு காவதத்தொலைவின்கண் உள்ள, பிறவுயிர்
- இந்நரகரல்லாத ஏனைய உயிர்கள், உய்யா - உயிர்த்திரா (இறக்கும் என்றபடி)
நாறினும் என்ற வும்மை, சிறப்பும்மை.

     நஞ்சும் அழற்குட்டமும் சீழ்த்தடங்களும் ஆகிய இந்நரகத்தின் நாற்றத்தை ஒரு
யோசனைத் தொலைவிடத்தே நின்று நுகரினும் ஏனைய உயிர்கள் இறந்துபடும் என்க.
அந்நாற்றத்தின் மிகுதியும் கொடுமையும் கூறியவாறு.

(835)

 
1946. எழுவின் முழமூன் றறுவிர லென்ப
வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே.
 
     (இ - ள்.) வழுவின் முதல் வாழ்வார் - குற்றமள்ள முதல் நரகத்தின் வாழ்வோருடைய
உடலின் உயரத்திற்குப் பேரெல்லை, எழுவில் முழ மூன்று அறுவிரல் என்ப - ஏழுவில்
மூன்று முழம் ஆறுவிரல் என்று கூறுவர்; அதன் கீழ்ப்புரை வாழ்வார் -
அக்கடைசி நரகத்தில் உள்ள ஒற்றைப்புரையில் வாழும் நரகர் உடல் உயரத்தின்
பேரெல்லை, முழுவில் ஐஞ்நூறு - ஐந்நூறுவில் என்று கூறுவர், ஒழிவில ஓசனை ஏழ்மேல்
பொங்குவர் - இவற்றுள் முதல் நரகத்தினர் இடையறாதனவாகிய ஏழுயோசனை உயரம்
வானத்தே இயங்கி உயர்வர், மூக்காவதம் - கீழ்நரகத்தினர் முக்காவத உயரம் இயங்கி
உயர்வர், (எ - று.)

     முதலதன்கண் வாழ்வார் உயரம் ஏழுவில் மூன்றுமுழம் ஆறுவிரல், இறுதி நரகில்
வாழ்வார் உயரம் ஐந்நூறுவில், முதல் நரகின் உயரம் ஏழுயோசனை கீழ்நரகின் உயரம்
முக்காவதம், என்றவாறு. இங்ஙனம் கொண்டுகூட்டிப் பொருள் கூறாதவிடத்து இது மற்றை
நூல்களோடு முரணுகின்றது; ஆகலின் மற்றை நூலோடு பொருந்துமாறு இங்ஙனம்
கூறினோம்.

(836)

 
1947. 1ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள
2நீண்டவர் வாழ்நா 3ணிறைவு கடலெல்லை
ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும்
வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே.
 

     (பாடம்) 1 யாண்டுச் சிறுமை 2 ஆண்டவர். 3 பெருமை.