பக்கம் : 1205 | | (இ - ள்.) வாழ்நாள் சிறுமை பதினாயிரம் ஆண்டு உள - அம் முதல் நரகத்தே வாழ்வார்களுடைய வாழ்நாளின் சிற்றெல்லைக்கே பதினாயிரம் ஆண்டுகள் உளவாம், நீண்டவர் வாழ்நாள் நிறைவு கடல்எல்லை - அந் நரகத்தின்கண் முடிய நீண்டு வாழ்வார் தம் வாழ்நாள் கடல் என்னும் எண்ணை எல்லையாக உடையனவாம், ஈண்டிதன் - இவ்விடத்தே இம்முதல் நரகத்தின், கீழ்க்கீழ் - கீழே ஒன்றன் கீழ் ஒன்றாகிய நரகத்தின்கண் வாழ்நாள், பெருகி வரும் - ஒன்றனுக்கொன்று பெருகும், எங்கும் - எந்த நரகத்தினும், சிறுமை வேண்டில் - வாழ்நாளின் சிற்றெல்லையை அறிய விரும்பினால், தம் மேலோர் நிறைவே - தாம் வாழ் நரகத்திற்குமேல் நரகில் வாழ்வாருடைய பேரெல்லையே தமக்குச் சிற்றெல்லையாகும், (எ - று.) நரகங்களின் வாழ்வோர் வாழ்நாளளவை கூறியவாறு. அவர் வாழ்நாளின் சிறுமை எல்லை பதினாயிரம் யாண்டுகள். கீழ்க் கீழ் நரகங்களின் வாழ்வோர் வாழ்நாள் நிரலே இவ்விருமடியாகப் பெருகும் என்க. | (837) | | 1948. | மூன்றுமொ ரேழு 1மொழிபஃதும் பத்தினோடே 2ஏன்றநல் லேழு மிருபத் திரண்டுமென் றான்ற வலைகடன் முப்பத்து மூன்றுமென் றூன்றின கீழ்க்கீ ழுயர்ந்தன வாழ்நாள். | (இ - ள்.) மூன்றும் - ஒருமூன்றும், ஏழும் - ஓரேழும், ஒழிபஃதும் - இவை ஒழிந்த ஒருபத்தும், பத்தினோடு ஏன்ற நல் ஏழும் - ஒரு பதினேழும், இருபத்திரண்டும் என்று - ஓர் இருபத்திரண்டும் என்றும், ஆன்ற அலைகடல் - நிறைந்த கடல் என்னும் பேரெண்கள், முப்பத்துமூன்றும் என்று - ஒரு முப்பத்துமூன்று என்றும், ஊன்றின - நிலை நிறுத்தப்பட்டனவாம், கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள் - முதல் நரகத்தின் கீழ்க்கீழுள்ள ஆறு நரகங்களின் வாழ்வார்க்கு நிரலே அமைந்த வாழ்நாள்களின் பேரெல்லைகள், (எ - று.) எனவே, முதல் நரகத்திலிருந்து நிரலே பேரெல்லை, ஒரு கடலும் மூன்று கடலும் ஏழுகடலும் பத்துக்கடலும் பதினேழு கடலும் இருபத்திரண்டு கடலும் முப்பத்து மூன்று கடலும், என்றாராயிற்று, சிற்றெல்லை நிரலே பதினாயிரம் யாண்டும், ஒருகடலும் மூன்று கடலும் ஏழுகடலும் பத்துக் கடலும் பதினேழுகடலும் இருபத்திரண்டு கடலும் ஆம் என்றுணர்க. | (838) | | 1949. | முடைகொண் முழுச்செவி 3யொண்பற் பதகர் உடையந் தலியிருப் புண்பது நஞ்சே | |
| (பாடம்) 1 ஒருபதும். 2 ஆன்றவேழு. 3 மொண்பற். | | |
|
|