பக்கம் : 1206 | | | புடையவர் காணிய போர்நனி மூட்ட மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார். | (இ - ள்.) முடைகொள் முழுச்செவி ஒண்பல் பதகர் - முடை நாற்றமுடைய அறக்கேள்வியாற் றோட்கப்படாத முழுமையுடைய செவியையும் ஒளியுடைய பற்களையும் உடைய நரகர்கள், உடை - உடையாக உடுப்பது, இருப்பு அந்தலி - இரும்பாலாகிய கவசம், உண்பது நஞ்சே - உண்ணுவது தம்மை வருத்தும் நஞ்சே, புடையவர் - அயலிலுள்ளோர், காணிய - கண்டுமகிழும் பொருட்டாய், போர் நனிமூட்ட - போர்த்தொழிலை மிக மூட்டிவிட, படுகொண்டு - படைகளைக் கைக்கொண்டு, மிடைவர் - போர்த்தொழிலின்கட் செறிவர், வேதனை மிக்கார் - இவ்வாற்றானும் துயரம் மிக்கவர் ஆவர், (எ - று.) அந்தளம் - கவசம். அந்தலி என மருவிற்று. படு - படையின் ஐ கெட்டுப் பகுதியளவிற்றாய் நின்றது. மூடனை முழுமகன் என்றாற்போன்று அறங்கேட்டலில்லாது பண்படாமை பற்றி முழுச் செவியென்றார், ஊன்மிசைதலே அறிவார் என்பார் ஒண்பல்லர் என்றார். | (839) | | 1950. | வேவா ரழலுள் விளியா 1ரளற்றினுள் ஓவார் புகையு ளுகையா 2வுழல்பவர் ஆவா வளிய நரகர் படுதுயர் ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே. | (இ - ள்.) அழலுள் வேவார் - தீயினுள்ளே வேகும் போதும், விளியார் - இறப்பாரும் அல்லர், அளற்றினுள் ஓவார் - சேற்றினுள் அழுந்தியும் ஒழிவாரல்லர், புகையுள் உகையா - புகைப்படலத்தூடே செலுத்தப்பட்டும், விளியார் - இறப்பாரல்லராய், உழல்பவர் - துன்பத்துள் உழல்வாராகிய ஆ! ஆ! - அந்தோ, அளிய நரகர் - அளிக்கத்தக்கவராகிய அந்நரகர்கள், படுதுயர் - அடைகின்ற துன்பம், ஏவார்சிலையாய் - அம்புகளை ஏவுதற்கியன்ற வில்லையுடைய வேந்தனே, இரங்குந்தகைத்தே - நம்மனோரால் இரங்கும் தகுதியையுடைய தொன்றாயிருக்கும், (எ - று.) விளியார் என்பது பிறிதோரிடத்தும் கூட்டப் பட்டது. அருள்புரிந்த நெஞ்சினராகலின் இவையிற்றைக் கூறுங்கால் அம் முனிவர் அந்நரகர் துயர்க்கு இரங்கி ஆஆ என்றார் என்க. | (840) | |
| (பாடம்) 1 ரளற்றுள். 2 வுழல்பலர். | | |
|
|