பக்கம் : 1207 | | நரகில் வீழ்தற்குரியார் இவர் எனல் | 1951. | ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர் தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில் தாங்கொண்1ட தார மறுத்துப் பிறன்வரைப் பூங்கொண்டை மாரைப் புணரு மவரும் | (இ - ள்.) தேம்கொண்ட பைந்தார் திறல்மன்ன! - தேனைத் தன்னகத்தே கொண்டுள்ள பசிய மலர்மாலையை உடைய ஆற்றல் சான்ற அரசனே!, ஆங்கு உண்டெனப்படும் - அந்நரகங்களிலே உளவாம் என்று கூறப்படுகின்ற, ஆழ்துயர் வீழ்பவர் - மீளாதவாறு அழுந்துதற்குரிய பெருந்துயரங்களிலே விழுந்துழல்வார், யார்எனில் - எத்தகையோர் என்றுவினவில், தாம் கொண்ட தாரம் மறுத்து- தாம் நூன் முறையாலே மணந்துகொண்ட மனைவியொடு வாழ்தலைவிட்டு, பிறன்வரைப் பூங்கொண்டைமாரை - பிறனுக்குரியளாய் அவனது வரைப்பிலே நிற்றற்குரிய, பூவால் அழகுறுத்தப்பட்ட கொண்டையையுடைய பிறமகளிரை, புணரும் அவரும் - புணர்கின்ற அறன்கடை நின்றோரும், (எ - று.) பூங்கொண்டைமார் என்றது இகழ்ச்சிக் குறிப்பு; அகத்தழகற்ற வேசியர் என்றபடி. அந்நகரத்தே வீழ்வார் யாரெனில் தந்தாரம் மறுத்துப் பிறன் மனையவரைப் பேணுமவர் என்க. | (841) | | 1952. | உள்ளங் கொடியா ருயிர்க்கொலை 2காதலர் வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள் கொள்ளுங் கொடுமைக் 3குணத்தின் மனித்தரும் நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார். | (இ - ள்.) நள்ளலர்ச் சாய்த்தோய் - பகைவர்களை வென்ற வேந்தனே, உள்ளம் கொடியார் - தீய நெஞ்சமுடையராய், உயிர்க் கொலை காதலர் - பிறவுயிர்களைக் கொல்லுந் தொழிலை விரும்புவோரும், கொடியன மேவி - களவு வஞ்சம் கொலை முதலிய தீத் தொழிலைப் பொருந்தி, பிறன் பொருள் வெள்ளம் கொள்ளும் - பிறனுடைய பொருட் பெருக்கத்தைக் கவர்ந்து கொள்ளும், கொடுமைக் குணத்தின் மனித்தரும் - கொடிய குணத்தையுடைய மனிதர்களும், நரகம் அடைவார் - அந்த நரகங்களிலே வீழ்பவராவர், (எ - று.) மேலும், உயிர்க் கொலை செய்வோரும் பிறன்பொருள் வெஃகுவோரும் கொடுமைக் குணமுடையோரும் அந்நரகப் பிறப் பெய்துவர் என்றார் என்க. | (842) | |
| (பாடம்) 1 டவரை. 2காதல. 3 குணமில் மனித்தரும். | | |
|
|