ஒழுங்கினாற் சூழப்பெற்றது; கண் - கண்கள்; கெண்டை - கெண்டை மீன்களைப் போன்றன; கிளரும்புருவம் - விளங்குகிற புருவமானது; சிலை - வில்லைப்போன்றதாகும்; மருங்குல் - இடை; உண்டு கொல் என உண்டு - உள்ளதோ இல்லையோ என்று ஐயப்படுமாறு நுட்பமானதாக விருந்தது, (எ-று.) வண்டுகள் கூந்தலுக்குக் கருநிறத்தில் உவமம். கண்டவர் கண் களிக்கச் செய்யும் அழகில் முகத்திற்குத் தாமரை மலர் நிகராம். அளகக்கொடி - அளகவல்லி என்னுமொரு மணியணிகலனுமாம். புருவத்திற்கும் வில்லிற்கும் வளைந்த வடிவில் ஒப்புமை. |
( 34 ) |
புருவங்கள் துவளுதல் |
153. | காதின் மீதணி கற்பகத் தொத்திணர் ஊது தேனிற கூன்றியி ருத்தொறும் 1போது தேர்முகத் தும்புரு வக்கொடி நோத லேகொல்நொ சிந்துள வாங்களே. |
(இ - ள்.) காதின் மீது அணி - சுயம்பிரபை காதின்மேல் அணிந்த; கற்பகத் தொத்து - கற்பகப் பூங்கொத்தில்; இணர் ஊது - தாதுண்ணவந்த; தேன் - வண்டுகள்; இறகு ஊன்றி இருத்தொறும் - இறகுகளைப் பதிய வைத்து அமருந்தோறும்; நோதலேகொல் - அச்சுமையைத் தாங்கமுடியாது வருந்துதலினாற்போலும்; போது தேர்முகத்தும் புருவம் கொடி - செந்தாமரை மலர்போன்ற அவள் முகத்திலுள்ள கொடிபோன்ற புருவங்கள்; நொசிந்துள - வளைந்துள்ளன; (எ - று.) ஆம், கள் : அசைநிலைகள். கொடிபோல மெல்லியனவாய் வளைந்து நீண்டுள்ள அவளது புருவங்கள் இயல்பாக வளைந்திருத்தற்கு, அவள் காதிலணிந்துள்ள கற்பகப் பூங்கொத்தில் தாதூத வந்த வண்டுகள் அங்கு இறகூன்றி யிருத்தலாகிய பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் அவை துவள்கின்றன போலுமென ஒரு காரணம் கற்பித்தனர். தேர் : உவமச்சொல். |
(55) |
(பாடம்) 1. போதுசேர் முகத்து. |