பக்கம் : 1211
 

     (இ - ள்.) ஓர் அறிவாகி உழக்கும் உயிர்களைப் பேர் அறிவாரும் பிறரில்லை -
ஒன்றறி உயிராய்ப்பிறந்து துன்புறும் புல்லும் மரமும் செடியும் கொடியும் பிறவுமாய
இவையிற்றின் பெயர்களைத்தாமும் முழுதும் அறிவார் யாரும் உலகின் இல்லை, இன்னவை
யார் அறிவார் - இவற்றை யாரே தான் அறிய வல்லுநர், அழியும் திறம் யாது எனில் -
இவை எவ்வாற்றான் அழிவெய்துவனவோ என்று வினவில், கூர் அறிவு இல்லவர்
கொன்றிடுகின்றார் - இவையும் உயிர் இனமே என்றறியும் கூர்த்தமதியில்லாப் பேதைகள்
இவற்றை அழித்துவிடுகின்றனர், (எ - று.)

     புல் மர முதலிய ஒன்றறி உயிர்களின் விகற்பங்கள் எண்ணில, அவற்றின் பெயர்
அறிதலும் இயலாது, இவையிற்றை அறிவில்லவர் கொன்றழிப்பர், என்க.

  (848)
 
இதுவுமது
1959. உயிர்த்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப்
பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப்
பயிர்த்தலு 1மின்றி யுலகம் பதைப்பச்
செயிர்த்தவர் போலச் 2செகுத்திடுங் கண்டாய்.
 
     (இ - ள்.) உயிர்த்தொகை ஆறனுள் ஒன்று ஒழித்து - உயிர்களின் பிறப்பின்
தொகையாகிய ஆறில் ஒன்று அறிவுயிராகிய தம்மினம் ஒழிய, ஏனைப் பெயர்த்தொகை
பெற்ற - எஞ்சிய இரண்டறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக உள்ள பெயர்களாலே
தொகுத்துக் கூறப்பட்ட, பிறவிகள் - இயங்கியற் பிறவிகள் தம்மை - நிலையியற்
பிறவியாகிய தங்களை, பயிர்த்தலும் இன்றி - தம்மிடத்தே குற்றமில்லாதிருந்தும், உலகம்
பதைப்ப - அறிஞர்கள் நடுங்குமாறு, செயிர்த்தவர்போல - பகைகொண்டவரைப்போன்று,
செகுத்திடும் கண்டாய் - அழித்தொழிக்கும், கண்டாய்: முன்னிலை அசை,
(எ - று.)

     ஒன்றறிவுயிரை, ஏனைய எல்லா வுயிரும் செகுத்திடும் என்க.

(849)

 
1960. ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
ஆனை முதலா வளிய விலங்குகள்
3மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
ஊனெய் யுருகு முழக்கு மொருபால்.
 

      (பாடம்) 1 மன்றி. 2 செத்திடுங். 3அடிகுறிப்பு தரப்படவில்லை.