பக்கம் : 1215 | | அவற்றைத் தாயர் வளர்ப்புழியும் பகை விலங்கு முதலியவற்றாற் றுன்புறும் என்க. | (856) | | 1967. | இன்னன துன்பமொ டிவ்விலங் காகுநர் என்னவ ரென்னி னிவைநனி கேளினி மன்னிய 1மாதவ 2மேற்கொண்டு மாயங்கள் பின்னை முயல்வார் பிறப்பு மதுவே. | (இ - ள்.) இன்னன துன்பமொடு - இத்தகைய துயரங்களுடனே, இவ்விலங்கு ஆகுநர் - இவ்விலங்குகளாய்ப் பிறப்போர், என்னவர் என்னின் - எத்தகையோர் என்று வினவுவாயாயின், இவை நனி கேள்இனி - இனி யாம் கூறுமிவையிற்றைக் கூர்ந்து கேட்பாயாக, மன்னிய மாதவம் மேற்கொண்டும் - நிலைபெற்ற பெரிய தவவொழுக்கத்தே நின்றும், பின்னை - மீண்டும், மாயங்கள் முயல்வார் - வஞ்சகம் களவு முதலிய கூடாவொழுக்கங்களில் முயல்கின்றவர்களின், பிறப்பும் அதுவே - மறுபிறப்பும் அவ்விலங்கின் பிறப்பேயாம், (எ - று.)| இத்தகைய விலங்குப் பிறப்பில் தவவுருவங்கொண்டு படிற்றொழுக்கம் முயல்வோர் புகுவர் என்க. | (857) | | 1968. | பொருளிடை மாயம் 3புணர்த்தும் பிறரை மருளிக ளாக மயக்கு மவரும் இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா அருளி லவரு மவைநனி யாவார். | (இ - ள்.) பொருளிடை மாயம் புணர்த்தும் - நென்முதலிய பொருள்களை அளவைகள் முதலியவற்றால் வஞ்சித்தும், பிறரை - அயலாரை, மருளிகள் ஆக - தம் வஞ்சம் அறியாது மயங்கும்படி, மயக்கும் அவரும் - மயக்கி ஏமாற்றுபவரும், இருளுடைய உள்ளமொடு - தீமை நிறைந்த நெஞ்சத்தோடே, ஏதங்கள் எண்ணா - பிறர் கேடுசூழும், அருள் இலவரும் - அருள் இல்லாத கயவரும், அவை நனி ஆவார் - அவ்விலங்குகளாய் மிகவும் பிறப்பார், (எ - று.) பொருளிடை மாயம் புணர்த்தலாவது “கொள்வது மிகைகொண்டு கொடுப்பது குறைகொடுத்தன்“ முதலியனவாம். | (858) | | 1969. | பற்றொடு பற்றி முனிந்தார் பலபல செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர் சுற்ற மழிக்குந் 4துவர்ப்பகை துன்னினர் மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா. | |
| (பாடம்) 1 மாதவர். 2 மேற்கொள. 3 புணர்ந்து. 4துவர்ப்பசை. | | |
|
|