பக்கம் : 1216 | | (இ - ள்.) பற்றொடு பற்றி - அவாவுடனே பொருள்களை மனத்தாற் பற்றிக்கொண்டு, முனிந்தார் - தம் அவாவிற்குக் கேடு செய்வார் உளராயவழி அவரை வெகுள்பவரும், செற்றம் நவின்றார் - சினமொழிகளைக் கூறி அடிப்பட்டோரும், செறுப்பொடு சென்றவர் - கொலைத்தொழிலோடே வாழ்நாள் கழித்தோரும், சுற்றம் அழிக்கும் - சுற்றத்தார்களையும் அழிக்குமியல்பிற்றாய, துவர்ப்பகை துன்னினர் - வெறுப்புடைய பகைமைக் குணத்தை மேற்கொண்டவரும், மற்று இவ்விலங்கு எய்தும் மன்உயிர் மன்னா - இவ்விலங்கினங்களிலே பிறத்தற்குரிய உயிர் ஆகுவர் அரசனே, (எ - று.) பற்றினைப்பற்றிச் சினந்தோறும் செற்றம் நவின்றோரும் பகை துன்னினரும் விலங்காகுவர் என்க. | (859) | | 1970. | இல்லை யுயிரென்று மில்லை பிறப்பென்றும் நல்லன 1தீயன நாடி லிலவென்றும் பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள் நில்லாது செல்வர் நிகோத கதியே. | (இ - ள்.) உயிர் இல்லை என்றும் - உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்று கூறியும், பிறப்பு இல்லை என்றும் - அவ்வுயிர் இறந்த பின்னர் மறுபிறப்பு அடைதல், இல்லை என்றும், நாடில் - ஆராயுமிடத்தே, நல்லன தீயன இல என்றும் - அறம்மறம் என்பன இல்லை என்றும், பல்லன சொல்லி - இன்னோரன்னவாய் உலகத்தார் உண்டென்பவற்றை இல்லை எனப்பற்பலவற்றை மொழிந்து, படுத்து உண்ணும் பாவிகள் - உயிர்களைக் கொன்று தின்னாநின்ற மறச்செயலுடையோர், நில்லாது நிகோதகதி செல்வர் - இறந்தவுடன் வேறியாண்டும் தாழ்த்தலின்றி இவ்விலங்குப் பிறவியிற்சென்று பிறவா நிற்பர், (எ - று.) உலகத்தார் உண்டென்பதில் லென்னும் அலகையை ஒப்போரும், படுத்துண்போரும் நிகோத கதியிற் செல்வர் என்க. | (860) | | மக்கட்கதித் துன்பம் மக்கட்பிறப்பின் வகை | 1971. | மாக மழைவண்கை மன்னவ மக்களும் மேக கதியின 2ரேய விகற்பினர் சேகர் மிலைச்சர் மனிதர்க டிப்பியர் போக மனித ரெனப்பொருட் பட்டார். | |
| (பாடம்) 1 தீவினை நலிவில. 2 ரேச, ரநேக. | | |
|
|