பக்கம் : 1217 | | (இ - ள்.) மாகம் மழை வண்கை மன்னவ - வான்கண்ணதாகிய முகில் போலும் கைம்மாறு கருதாத வள்ளன்மையுடைய பயாபதி வேந்தே, மக்களும் - மனிதர்கள் எல்லோரும், ஏக கதியினர் - பிறப்பானே ஒரே தன்மையுடைய ராயினும், ஏய - இசைந்த, விகற்பினர், - வேற்றுமையுடையோர் ஆவர், சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர் போகமனிதர் என - அவ்வேற்றுமை யுடையோர் சேகர் என்றும் மிலைச்சர் என்றும் மனிதர் என்றும் திப்பியர் என்றும் போகமனிதர் என்றும் கூறப்படுகின்ற, பொருட்பட்டார் - சொற்களுக்குப் பொருளாகப் பொருந்திய ஐவகையினருமாம், (எ - று.) “நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பில் குமானுயரோ டல்ல வருள்ளுறுத் தாடவர் ஐவருளர்Ó என்றார் நீலகேசியினும் (தருமவுரைச். 82) மனிதருள்ளும் ஐவகைய ருளர் என்க. | (861) | | சேகர் இயல்பு | 1972. | பத்து வகைய பரதவி ரேவதத் தத்தகு கால விழிவி னகத்தவர் சித்தந் தெளிவிலா சீல மடைவிலர் செத்த வறிவினர் சேக ரவரே. | (இ - ள்.) பத்துவகைய - பரதம் ஐந்தும் ஐராவதம் ஐந்தும் எனப் பத்து வகையவாகியவற்றில் வைத்து, பரத இரேவதத்து - பரதகண்டம் ஐந்தனுள் வாழ்வோராய், அத்தகுகாலம் - அக்கண்டத்துத் தாம் வாழத்தக்க காலமெல்லாம், இழிவின் அகத்தவர் - இழிந்த குணங்களையுடைய உள்ளமுடையோராய், சித்தம் தெளிவிலர் - அறிவு தெளியப் பெறாதாராய், சீலம் அடைவிலர் - ஒழுக்கநெறிக்கட் சேராதவராய், செத்த அறிவினர் - அறிவற்றவராவர், சேகர் அவரே - சேகர் என்று கூறப்படும் வகையினர், (எ - று.) இழிவு - அவஸர்ப்பிணி. இரேவதம் - கண்டம். அவை, பரதகண்டம் ஐந்தும் ஐராவதகண்டம் ஐந்தும், என்னும் பத்து வகைப்படும். அவற்றுள் சேகர் என்பவர் பரத கண்டத்துள் வாழும் ஒரு வகை மனிதர் என்றுணர்க. செத்த அறிவு - அறிவின்மை. | (862) | | மிலைச்சர் | 1973. | தீவினுள் வாழுங் 1குமானுயர் தேசத்து மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர் | |
| (பாடம்) 1 குமானுடர். | | |
|
|