பக்கம் : 1219
 
 
  மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது
மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார்.
 
     (இ - ள்.) மக்கட் பிறப்பெனும் மாத்திரம் அல்லது - மக்கட் பிறப்புடையோர்
என்னுந்துணையே அன்றி, அவர் - அக் குமானுயர் என்னும் மிலைச்சர்கள், வெளிற்று
விலங்குகளே - அறிவற்ற விலங்கே, நக்க உருவினர் - ஆடையில்லாத
உருவத்தையுடையோராய், நாணா வொழுக்கினர் - நாணமற்ற தீயொழுக்கமுடையோராய்,
தொக்கனர் - கூட்டமாய்க் கூடி, மண்ணே துளைத்துண்டு வாழ்வார் - மண்ணைத்
தோண்டித் தின்று வாழாநின்றனர், (எ - று.)

     நக்கவுரு - ஆடையில்லாத உருவம்.

     குமானுயரும் ஒருவகை விலங்கென்றே கொள்க என்பதாம்,

(865)

 
1976. பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம்
மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர்
ஓவலர் வாழ்வ தொருபளி 1தோபமென்
றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ.
 
     (இ - ள்.) பூவும் பழனும் நுகர்ந்து - மலர்களையும் பழங்களையும் தின்று, பொழில்
மரம் மேவி - சோலையினுள்ள மரங்களிலே பொருந்தி, உறையும் - வாழ்கின்ற, மிலைச்சர்
மிகப்பலர் - மிலைச்சர்கள் சாலப் பலராவர், ஏவல் சிலை மன்ன! - அம்பு விடுதலிலே
வல்லுநனான வில்லையுடைய வேந்தனே, ஓவலர் - ஒழியாதவராய், வாழ்வது - இவர்கள்
வாழ்தற்குரிய காலம், ஒரு பளிதோபம் என்று - ஒரு பல்லம் என்று, எண்ணி உணர்நீ - நீ
ஆராய்ந்து அறிந்துகொள்க, (எ - று.)

     பளிதோபம் - பல்லம், ஓரெண்.

     மரங்களிலே மேவிப் பூவும் பழனும் நுகர்ந்து வாழும் இம்மிலைச்சர் ஒரு பல்ல காலம்
அகவையுடையோர் என்க.

(866)

 
1977. தேச 2மிலைச்சரிற் சேர்வுடை யாரவர்
மாசின் மனிதர் வடிவின ராயினும்
3கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
நீச ரவரையு நீரி னிழிப்பாம்.
 

     (பாடம்) 1 தோமென். 2மிலைச்சரரெனப்படுவாரவர். 3கூச.