பக்கம் : 1220 | | (இ - ள்.) தேச மிலைச்சரில் சேர்வுடை யாரவர் - தேயத்தில் வாழும் இயல்புடைய மிலைச்சர், மாசில் மனித வடிவினர் ஆயினும் - குற்றமற்ற மக்கள் வடிவமே உடையர் எனினும், கூசுஇன் மனத்தர் - நாணம் இல்லாத மனம் உடையோர், கொடுந் தொழில் வாழ்க்கையர் - கொடிய தீத்தொழிலையே செய்து உயிர் வாழ்வோர், நீசர் - கயமையுடையோர், அவரையும் - ஆதலின் அம் மிலைச்சரையும், நீரின் - மக்கட் பண்பின், இழிப்பாம் - சேர்க்காமல் விலங்குகள் என்றே கொள்வோம், (எ - று.) தேச மிலைச்சரும் கூசின் மனத்தரும் கொடுந்தொழிலருமாகிய நீசராகலின் அவரும் விலங்கே என்க. | (867) | | 1978. | கூடன் மிலைச்சர் 1குமானுட ரென்றிவர் ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில் கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை நாடினர் கொள்ளா நலமி லவரும். | (இ - ள்.) கூடல் மிலைச்சர் - தேசத்தினுட் கூட்டங் கூட்டமாய்க் கூடி வாழ்வோராகிய மிலைச்சரும், குமானுயர் - தீவினுள் வாழும் குமனிதர் என்னும் மிலைச்சரும், ஆபவர் எவர் எனில் - ஆகித் தோன்றுபவர் யாரோ என்று வினவின், ஏடவிழ் தாரோய் - இதழ் விரிக்கும் மலர் மாலையணிந்த மன்னனே, கோடி - மனம் கோணி, குதர்க்கம் உரைத்து - மாறுபட்ட வெளிறு பேசி, குணங்களை நாடினர் கொள்ளா - பயன்மிக்க நற்குணங்களை ஆராய்ந்து மேற்கொள்ளாத, நலமிலவரும் - நன்மையில்லாதவரும், (எ - று.) மிலைச்சராய்ப் பிறப்போர் குதர்க்கம் உரைத்துக் குணங்கொள்ளா நலமிலவரும்,என்க. நலமிலவரும், ஆங்கவர் ஆபவர் (1980 இல்) என்று முடிவுறும். | (868) | | 1979. | அடங்கா மரபி னவர்கட் கடங்கார் விடங்கார் மணந்த விடக்கும் பிறவும் உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர் தொடங்கா வினைக டொடங்கு மவரும். | (இ - ள்.) அடங்கா மரபினவர்கட்கு - தம்பால் அடக்கமிலாத முறையையுடைய தம் பகைவர்க்கு, அடங்கார் - பகைவராயினார், கார் விடம் மணந்த - கரிய நஞ்சு கலந்த, விடக்கும் பிறவும் - ஊன் உணவு முதலியவற்றை, உடங்கு ஆய்ந்து - வஞ்சத்தால் இவருடன் கூடி அமய முதலியவற்றை ஆராய்ந்து, உணக்கொடுப்பாரும் - அவருண்ணும்படி கொடுப்பவர்களும், உயர்ந்தோர் தொடங்கா வினைகள்- சான்றோரால்பழித்தொதுக்கப்பட்ட தீவினைகளை, தொடங்குமவரும் - செய்வோரும், (எ - று.) | |
| (பாடம்) 1 குமானுய. | | |
|
|