பக்கம் : 1222 | | இரண்டரைத் தீவுகளாவன:- சம்புத் தீவும், தாதகீடண்டத் தீவும் புட்கரத்தீவிற் பாதியுமாம். “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.Ó என்னுந் திருக்குறளை ஒப்பு நோக்குக. | (871) | | மக்கட் பதடிகள் | 1982. | முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர் தக்க தகாவென்ப தோராத் தகையவர் மக்க ளெனப்படு வாரலர் மற்றவர் பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ. | (இ - ள்.) முக்குலத்தாரொடும் - இம்மூன்று வகை மனிதர்களோடு தோன்றியும், மூடத் தொழுதியர் - மூன்று வகைப்பட்ட மூடங்களையும் உடைய இக் கூட்டத்தார், தக்க தகா என்பது ஓராத் தகையவர் - இவை செய்யத்தகும் அறச் செயல்கள்; இவை செய்யத் தகாத மறச்செயல்கள் என்று ஆராய்ந்துணரும் தன்மையற்றவர், மக்கள் எனப்படுவார் அலர் - இன்னராதலின் இவர்களும் மனிதர்கள் என்று கருதத் தகுந்தவர் அலலர், மற்றவர் - அம் மனிதர்கள், பக்கம் கிடக்கும் பதர் எனக் கொள் நீ - (நெல்லினுட் பிறந்து அவற்றயல் கிடக்கும் பதர்போன்று) பக்கத்திலே கிடக்கும் மக்கள் பதடிகள் என்று நீ உணர்ந்து கொள்வாய், (எ - று.) மக்களுட் பிறந்தனரேனும் மக்கட் பண்பிலாதாரை மக்கள் என வேண்டா, மக்கட் பதடிகள் என்க, என்றபடி. | (872) | | 1983. | நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள் இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல் அல்லியந் தாரோ யரிது பெரிதே. | (இ - ள்.) நல்ல நிலங்கள் - அறநெறி நிற்றற்கியைந்த சிறப்புடைய நாட்டிலே பிறத்தலும், நலங்கொள் வடிவுகள் - அகம் புறங்களிலே ஊனமில்லாத மனித உடலைப் பெறலும், இல்லை அமர்ந்துழி - இல்லறத்தை விரும்புமிடத்தே, தோன்றலும் - பிறத்தலும், எனஇவை - என்று கூறப்பட்ட இப் பேறுகளை, எல்லையில் யோனிகள் எல்லாம் இகந்து - அளவிறந்த ஏனைய பிறவிகளைக் கடந்து, எய்தல் - அடைதல், அல்லியந் தாரோய் - தாமரைமலர் மாலையை உடையோனே, பெரிது அரிது - மிக்க அருமையே யாம், (எ - று.) | |
| | | |
|
|