பக்கம் : 1225
 

      (இ - ள்.) ஒருவன் - ஒருசாத்தன், ஆனைதுரப்ப - தன்னை ஒரு காட்டியானை
துரத்திவர ஓடி, அரவு உறை ஆழ்குழி - நச்சுப்பாம்பு வதிகின்ற ஆழிய ஓர் கிணற்றில்
வீழ்ந்து, நால்நவிர் பற்றுபு - அதனுள் தொங்குகின்ற கொடியைப் பிடித்துக்கொண்டு, நாலும்
- தொங்குவானாக, ஓர் தேனின் அழிதுளி - அவ்வமயம் ஆங்குள்ள தேத்திறாலின்கண்
நழுவிச் சொட்டிய தேன்றுளி ஒன்று, நக்குந் திறத்தது - தன்வாயில் வீழ அதனை
இனிதெனச் சுவைத்ததை ஒப்பதாம், மானுயர் இன்பம் - பல்வேறு வகைப்பட்ட துன்பம்
நிறைந்த மானிட வாழ்க்கையினூடே அவர்கள் நுகரும் இன்பம், நீ மதித்தனைகொள் - நீ
இதனை ஆராய்ந்து உணர்க.

     யானையாற் றுரத்தப்பட்ட ஒருவன் பாழ்ங்கிணற்றிலே வீழ்ந்து, அதனுள் தூங்கும்
கொடிபற்றித் தூங்குங்கால் மேலிருந்து அவன் வாயிற் சொட்டிய ஒருதுளி தேனை நக்கி
அவன் இன்புற்றதைப் போலும் மானிடவாழ்க்கையில் இன்புறுதல் என்க.

(878)

 
1989. அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந்
தின்பங் கருது மிருவர்க் 1கிடைபல
துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில்
முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே.
 
     (இ - ள்.) அன்பும் பிறவும் அமைந்து - அன்பும் அறச்செயல் முதலியனவும்
உண்டாகப்பெற்று, ஆங்கு அகத்திருந்து - அவ்விடத்தே இல்லத்தே இருந்து,
இன்பங்கருதும் இருவர்க்கு இடை - காம வின்பத்தைக் கருதிய கிழவன் கிழத்தியாகிய
இருவர் தம் வாழ்க்கையின் ஊடேயும், பல துன்பங்கள் தோன்றும் - பல்வகையான
இன்னல்கள் எதிர்பாராதே வந்து இயைவனவாம், தொடர்ப்பாடு உளவெனில் - யான்
எனதென்னும் இரு வகைப்பற்றும் உளவாயின், முன்பு அவை யில்லெனின் - முன்னர்
அவ்விருவகைப் பற்றுக்கும் காரணமாகிய இல்லறம் இல்லாத விடத்தேயாயின், தொழில்
முற்றும் - இருவினை கெட்டொழியும்,

     தொடர்ப்பாடுளவெனில் பல துன்பங்கள் தோன்றும், இல்லெனில் தொழில்
முற்றும் என்க.

(879)

மக்கள் விரதங்களால் எய்தும் பயன்

1990. இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
பொன்னியல் சேர்கற்ப போக 2நிலங்களில்
துன்னு முயற்சி துணியுந் திறமே.
 

     (பாடம்) 1 கிடர்பல. 2 நிலங்களும்.