பக்கம் : 1226 | | (இ - ள்.) இன்ன நிலைமை - இத்தன்மையுடைய, இதனுள் - இவ்வில்லறத்துள்ளே, பிறந்தவர் - மனிதராகத் தோன்றியவர், வதத்தாற் பெறுவது ஒன்று உண்டு - விரதங்களாலே பெறுவதற்குரிய உறுதி ஒன்றுளதாம், (அஃதியாதெனில்) பொன் இயல்சேர் கற்ப போக நிலங்களில் - அழகிய இயல்புடைய கற்பம் என்னும் இன்ப உலகங்களிலே, துன்னும் முயற்சி - எய்தும் நன்முயற்சியை, துணியும் திறமே - தெளிந்து செய்யும் தன்மை உடைமையாம் (அது), (எ - று.) அரியதும் இன்பற்றதுமாகிய மக்கட் பிறவியிற் பிறந்தார்க்கு உறுதியுமுளது, அது யாதெனில் போகநிலத்தே பிறத்தற்குரிய முயற்சியைத் துணிதலாம், என்க. | (880) | | முயற்சி துணிதிறம் | 1991. | துன்னு முயற்சி துணியுந் திறமவை பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும் தன்னிய றானந் தவமொடு பூசனை என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ. | (இ - ள்.) துன்னும் முயற்சி துணியும் திறம் அவை - கற்ப உலகங்களிலே செல்லுதற்குரிய நற்செயல்களைத் தெளிந்து கொள்ளும் முறைகளை, பன்னி உரைப்பில் - ஆராய்ந்து கூறின், பலவாயப் பெருகினும் - பலபட விரியுமாயினும். (சுருங்கக்கூறுமிடத்தே), தன் இயல் தானம் தவமொடு பூசனை என்னும் - தானமும் தவமும் பூசனையும் தன்னியலும் என்று கூறப்படுகின்ற, இந்நான்கு என - இந்த நான்கு முயற்சிகளுமே என்று, எண்ணி உணர்நீ - நீ ஆராய்ந்து அறிவாயாக, (எ - று.) தன்னியல் - உயிரின் இயல்பாகிய, சீலம்; தானம் சீலம் தவம் பூசனை என எண்ணுவதே முறையாயினும், செய்யுளாகலின் அம்முறை பிறழ்ந்து தன்னியல் முன்னர் வைக்கப்பட்டது. “நற்றானம் சீலம் நடுங்காத்தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும் மற்றாங்குச் சொன்ன மனைவியர்Ó என்றார் சிந்தாமணியிலும். | (881) | | தானத்தினியல்பு | 1992. | தலையு மிடையுங் 1கடையுமாச் சாற்றும் நிலைமைய தான நிழன்மணிப் பூணோய் 2உலைவிலேற் போனுட னீபவ னீயும் மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா. | |
| (பாடம்) 1 கடையுமென விந்நிலைமை. 2 உலைவில னேற்பவர்க் கீயும்பாணிய. | | |
|
|