பக்கம் : 1229
 

     என்னும் திருக்குறளானும், காலத்திற் கியையச் செய்யும் உதவியின் மாண்பினை
உணர்க.

     போதிசைவு முதலிய ஏழும் ஈவோன் குணம் என்க.

(885)

 
ஞான வொழுக்கம் (சீலம்)
1996. தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய
ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது
ஞான வொழுக்கம் பெருகு 1நலத்ததை
ஈனமி 2லின்ப நிலங்கட்கு வித்தே.
 
     (இ - ள்.) தானும் அடங்கி - தானும் பொறிகளின் வலிமையை வாட்டி
அடக்கமுடையவனாகி, அடங்கினர்க்கு ஏந்திய - அடக்கம் உடையவர்கட்கு மேற்கொள்ளத்
தக்கவைகளையும், உயிர்கட்கு ஊனம் - உயிர்கட்குப் பிறத்தல் முதலிய துயரங்கட்குக்
காரணமான குற்றங்களையும், எல்லாம் - இன்னோரன்ன எல்லாவற்றையும், உணர்வது -
ஐயந்திரிபின்றி உணர்ந்து கோடல், ஞானவொழுக்கம் - அறிவொழுக்கம் எனப்படும்,
பெருகும் நலத்ததை - மிக்க நன்மையுடைய இவ்வறிவொழுக்கம், ஈனமில் இன்ப நிலங்கட்கு
- குற்றமற்ற இன்ப உலகங்களாகிய கற்ப உலகங்களில் சென்று இன்புறுதற்கு, வித்தே -
விதையாகும், (எ - று.)

     “ஓர்த்தற் றெளிவொடு ஒழுக்கம் இவையுண்டார்
     பேர்த்தப் பிணியுட் பிறவார் பெரிது இன்பமுற்றேÓ - நீலகேசி.

     தானும் அடங்குதலாவது:- தன் மனம் மொழி மெய்கள் தீநெறிக்கட் செல்லாது அடங்குதலுடையதனால். இவ்வடக்க முடைமை “ஈனமிலின்ப நிலங்கட்கு வித்’ தாதலை

     “அடக்கம் அமரருள் உய்க்கும்Ó என்னும் வள்ளுவர் பொன்மொழியானும் உணர்க. நலத்ததை, என்பதன் கண்ணுள்ள, ஐ : சாரியை.

(886)

 
உண்டி கொடுத்தோர்க் குறுபயன்
1997. கடைநின் 3றவருறு கண்கண் டிரங்கி
உடையதம் மாற்றலி னுண்டி கொடுத்தார்
படைகெழு தானைய பல்களி யானைக்
குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.
 

     (பாடம்) 1 நலத்தை. 2 போக. 1 நலத்தை.