பக்கம் : 123
 

இது சுயம்பிரபை மணப்பருவ மெய்தினமை கூறிற்று. குமிழ்க்கின்றன; வினையாலணையும்
பெயர். அங்கராகம் மெய்ப்பூச்சு. நாகரிகப் பொறை என்றது அணிகலன்களை.
 

( 37 )

வளருதல்

156. மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்.
 

     (இ - ள்.) நறுங்குழல் மங்கைமார் பலர் - நன்மணம்மிக்க கூந்தலையுடைய தோழிப்
பெண்கள்பலர்; மங்குல்தோய் - முகில்கள் படியப் பெற்ற; வரைமன்னவன் தொல்குடி
நங்கை போற்றி என்று ஏத்தி - வெள்ளிமலை யரசனது பழைமையான குடியில் தோன்றிய
பெண்ணே வாழ்வாயாக என்று கூறி வணங்கி; காப்ப - பாதுகாக்க; வளர்ந்து - மேன்
மேலுஞ்சிறந்து; தன் கொங்கையால் - தன்னுடைய கொங்கைகளின் சுமையால்; சிறிதே
குழைவு எய்தினாள் - ஒரு சிறிதளவே தளர்ச்சியடைந்தாள், (எ - று.)
வளர்ச்சியை அடைந்த சுயம்பிரபை, தன்கொங்கைச் சுமையால் சிறிதே தளர்ச்சியை
அடைந்தனள் என்க. வரை - வெள்ளிமலை. மன்னவன் - சடியரசன்.
 

( 38 )

பற்கள் தோன்றுதல்

157. வாம வாணெடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நல்லொளி முள்ளெயி றுள்ளெழு
1காம னாளரும் பிற்கடி கொண்டவே.
 

     (இ - ள்.) வாம வாள் நெடுநோக்கி - அழகிய ஒளியுள்ள நீண்ட
கண்களையுடையவளும்; மடங்கனி தூம வார்குழலாள் துவர் வாயிடை - இளமை நிரம்பப்
பெற்றவளும் அகிற்புகை யூட்டப்பெற்ற நீண்ட
 


     (பாடம்) 1. காமநாளரும்.