பக்கம் : 1233 | | எல்லா விரதமும் என்றதன் கண் உம்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. “ஒன்றாக நல்லது கொல்லாமைÓ, “கொல்லா நலத்தது நோன்மை’. “கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலைÓ என்னும் பொன் மொழிகளானும் கொல்லா விரதத்தின் பெருமையை உணர்ந்து கொள்க. | (892) | | தவத்தின் சிறப்புரைத்தல் | 2003. | தம்மை யுடையவர் தாங்குந் தவத்தியல் எம்மை வினவி னெமக்கு முரைப்பரி தும்மை யுலகத் தொளிபடு மூக்கமோ டிம்மை 1யிகந்தார்க் கிசையு மதுவே. | (இ - ள்.) தம்மை உடையவர் - தம் நெஞ்சின்வழித் தாம் செல்லாது அதனை அடர்த்துத் தம் வழிப்படுத்திய சான்றோர்களால், தாங்கும் தவத்தியல் - மேற்கொள்ளற்பாலவாகிய தவத்தினது இயல்பை, எம்மை வினவின் - எம்மை எத்தன்மைத்தென்று வினவின், எமக்கும் உரைப்பரிது - எம் போன்ற துறவியர்க்கும் அத்தவப்பெருமை கூறுதற்கு அரிதாகும், உம்மை யுலகத்து ஒளிபடும் ஊக்கமொடு - துறக்க உலகத்துச் சென்று புகழுடைய ராதற்குரிய மன எழுச்சியுடனே, இம்மை இகந்தார்க்கு - இப்பிறப்பில் உளவாகிய இன்பங்களை ஒரீ இயவர்களுக்கே, அது இசையும் - அத்தவம் கைகூடும், (எ - று.) தம்மையுடையவர், தம்மனம் புலன்வழிச் செல்லாது அடக்கித் தம் வழிப்படுத்திய சான்றோர். தம்பொறியடங்க அடங்கியவரின் தவப் பெருமை எம்மாலும் உரைத்தற்கரியதாம். ஊக்கத்தோடே இவ்வுலகப் பொய்யின்பத்தை ஒரீஇய சான்றோர்க்கே அத்தவம் கைகூடும் என்பதாம். “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்றுÓ என்னும் திருக்குறட் கருத்தை இச்செய்யுளிற் காண்க. | (893) | |
| (பாடம்) 1 யிகந்தாங்கு. | | |
|
|