பக்கம் : 1234
 

இதுவுமது

2004. தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
1எவன்செய்து மென்னை யீர்மலர்த் தாரோய்.
 
     (இ - ள்.) தவம் செய்து வந்தார் - கழிந்த பிறவிகளிலே தவநெறியிற் பயின்றடிப்பட்டு
இப்பிறவியில் பிறந்தவர்களே, தவநிலை நிற்பார் - தவநெறியிலே உறுதியுடன் நிற்கும்
ஆற்றலுடையோர் ஆவர், அவம்செய்து வந்தார்க்கு - அவ்வாறன்றி முற்பிறவிகளிலே தவம்
அல்லாதவற்றைப் பயின்று வந்தவர்களுக்கு, பெரிதும் அரிது - அத்தவ நிலைநிற்றல்
பெரிதும் இயலாதாம், செய்தும் என்னை - ஆதலின் இவர் இத்தவம் செய்தும் யாது
பயன்பெறவல்லார், ஈர்மலர்த்தாரோய் - தண்ணிய மலர் மாலையணிந்த மன்னனே, பவம்
செய்து - தீவினைகளையே செய்து, மாக்கள் - அறிவிலிகள், பரியும் அதுதான் எவன் -
அவற்றின் பயனாகிய துன்பத்தை நுகருங்கால் பரிவுகொள்வது யாது கருதியோ, (எ - று.)

     பவம் : ஆகுபெயர்

     “தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
     யஃதிலார் மேற்கொள் வதுÓ  என்னும் திருக்குறட் கருத்தை ஈண்டுக் காண்க.

     முன்னர்த் தீவினைசெய்து அதன் பயனை நுகருங்கால் அல்லற் படுவதெவன்
என்றார், என்க.

(894)

 
2005. தெருண்டவர் மேற்கொளுஞ் செய்தவச் செல்வம்
2இரண்டும் பலவு 3மியலாய்ப் பெருகு
மருண்டினி யென்னவை வந்த பொழுதே
முரண்டரு தோண்மன்ன முற்ற வுணர்நீ.
 
     (இ - ள்.) தெருண்டவர் மேற்கொளும் - மெய்யுணர்வுடையோராலே
மேற்கொண்டொழுகப்படும், செய்தவச் செல்வம் - செவ்விய தவமாகிய செல்வம், இரண்டும்
பலவும் இயலாய்ப் பெருகும் - தொகையான் இரண்டாய் வகையாற் பலவாம்
இயல்புடையதாய் விரியும், இனி மருண்டு என் - இனி அவையிற்றை விரித்தற்கு அஞ்சின்
என்னாம், அவை வந்தபொழுதே - அவை அதிகாரப்பட்டு வரும்பொழுது, முரண்தருதோள்
மன்ன - வலிமையுடைய தோளையுடைய வேந்தே, நீ முற்றவுணர் - நீ முழுதும் உணர்ந்து
கொள்வாய், (எ - று.)
 

      (பாடம்) 1 எவஞ்செய்துமேனை. 2 இரண்டு. 3 மிகற்பாய்ப்.