யாம் அவையிற்றை விரித்தற்கு அஞ்சுகின்றோமாயினும் ஒருவாறு கூறுவதைக்கொண்டு உணர்க, என்பதாம். |
(895) |
|
அறிவற் சிறப்பின் பயன் அறைதல் |
2006 | உலகங்கண் மூன்று முடைய பெருமாற் கலகையில் பூசனை யாற்ற முயன்றால் 1திலக மிவரெனத் தேவர்க ளாவர் விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய். |
(இ - ள்.) உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு - கீழ்மேல் நடுவென்னும் முத்திறத்துலகங்களையும் அருளாட்சியுடைய அருக பரமேட்டிக்கு, அலகைஇல் பூசனை - எண்ணிறந்த வழிபாடுகளை, ஆற்ற முயன்றால் - இயற்றத் தொடங்குவார்களாயின், தேவர்கள் திலகம் இவர் என ஆவார் - தேவர்களும் இவர் எமக்குத் தலைவர் என்று போற்றும்படி உயர்ந்த தேவராவார், விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய் - விரிகின்ற சுடராகிய ஒளியையுடைய அணிகலன் பூண்ட பருத்த அழகிய தோள்களை யுடைய மன்னனே, (எ - று.) “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்Ó என்றார் தெய்வப் புலவரும். |
(896) |
|
புண்ணிய வாயில்கள் பிறவும் உளவெனல் |
2007. | புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை கண்ணிய நான்கா 2யடங்கினுங் காவல நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர் எண்ணிய வாயில்க ளின்னு முளவே. |
(இ - ள்.) புண்ணிய வாயில் என - கற்ப உலகங்களை அடைதற்குரிய நல்வினையாகிய வழிகள் என்று, நாம் - யாம், புகழ்ந்து உரை கண்ணிய - புகழ்ந்து மொழிந்தமையாலே கருதப்பட்டவை, நான்காய் அடங்கினும் - தன்னியல் தானம் தவம் பூசனை என்னும் நான்கு வகையானே அடங்குவனவானாலும், காவல - அரசனே, நுண்ணிய நூல்வழி - நுண்பொருள்களையுடைய மெய்ந்நூல் வாயிலாய், நோக்கி - பார்த்து, நுனித்தவர் - ஆராய்ந்த சான்றோர், எண்ணிய வாயில்கள் - கருதிய வழிகள், இன்னும் பல உள - இவையிற்றின் வேறாய்ப் பலவுளவாம், (எ - று.) |
(897) |
|
|
(பாடம்) 1 திலத. 2யடங்கு மடங்கினும். |