பக்கம் : 1240
 

     நன்றியில் மாற்றினை நல்கும் - அவற்றுள் இரண்டு நன்மையில்லாத
பிறப்பிறப்பினையே தருவனவாம், அல்லன - எஞ்சிய இரண்டும், வென்றி விசும்பொடு -
வெற்றியை உடைய சுவர்க்கத்தோடு, வீடும்தரும் - அழிவில்லாத வீட்டின்பத்தையும்
கொடுக்கும், (எ - று.)

     மாற்று - பிறப்பிறப்பு ; மாறும் இயல்புடைமையின் மாற்றென்றார் ;

     தியானம் :- ஆர்த்தம் இரௌத்திரம் தருமம் சுக்கிலம் என நான்கு வகைப்படும்.
அவற்றுள் முன்னைய விரண்டும் பிறப்புக்குக் காரணமாம், பின்னைய இரண்டும் முறையே
துறக்கத்தையும் வீட்டையு நல்கும் என்பதாம்.

     ஆர்த்தத் தியானமாவது :- அன்புடையோர் இறக்கும்போதும் பகைவர் செழிப்புறும்
போதும், இடுக்கண்கள் மிக்கபோதும் துறக்கவின்பத்தே அவாவுற்றபோதும் எழுகின்ற
அவாவோடு கூடிய நினைவுத் தொடர். இதற்குப்பயன், விலங்குகளாகப் பிறத்தலாம்.

     இரௌத்திரத் தியானமாவது :- கயமைத் தொழில்களிலே ஆனந்தமடையும்
ஓரியல்புடையனாய் அவற்றைப் பற்றியே தொடர்ந்து நினைவுண்டாதல். இதற்குப் பயன்,
நிரயம் எய்துதலாம். இவ் விரண்டையும் துன்பத்தியானம் என்றும் கூறுப.

     இனி, தர்மத் தியானமும், சுக்கிலத் தியானமும் இன்பத் தியானம் என்ப. இவற்றுள்,
தர்மத்தியானம், கற்ப உலகங்களை எய்துவிக்கும் ; சுக்கிலத் தியானம் வீட்டின்பத்தைத்
தரும் என்ப. இவற்றின் விரிவெல்லாம் விரிந்த நூல்களுட் காண்க.
 

(905)

 
 
2016. போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ்
வாற்றி முயல்வார்க் 1ககநிகழ் வாமவை
மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற்
பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே.
 
     (இ - ள்.) போற்றிய - சான்றோர்களாற் போற்றப்பட்டனவும், முன்புகழ்வு - முன்னர்
எம்மாற் புகழ்ந்து கூறப்பட்டனவுமாகிய, புண்ணியப் பொற்சுண்ணம் - பத்துவகை அறமாகிய
பொற்சுண்ணம் என்னும் மணப்பொடியை, ஆற்றி - அணிந்து கொண்டவராய், முயல்வார்க்கு
தரும சுக்கிலத்தியானங்களிலே முயல்கின்றவர்க்கு, அகநிகழ்வாம் - அம்முயற்சி
வீட்டினகத்தே தம்மைச் செலுத்தும் தவநிகழ்ச்சியாம், மாற்றி - அம்முயற்சிக்கு மாறுபட்டு,
அவற்றை மறுதலையாக்கொளின் - அத்தியானத்தின் மறுதலையாகிய ஆர்த்த
ரௌத்திரத்தியானங்களை மேற்கொண்டால், பாற்றி - பிறவிகளிலே விழும்படி செய்து,
உழப்பிக்கும் - இன்னலுறுத்தும், பாக நிகழ்வே - பிரவிருத்தி நிகழ்ச்சியாகும், (எ - று.)

     (பாடம்) 1 ககமகிழ்.

     அக நிகழ்வு நிவிருத்தி மார்க்கம் - பாக நிகழ்வு - பிரவிருத்தி மார்க்கம்.

     தசவித தருமத்தைப் பொற்சுண்ணமாக உருவகித்தார் - இங்ஙனமே
மேருமந்தரபுராணமுடையாரும். “அழுக்கிலா மாதவச் சாந்துமட்டியா“ என்புழி,
பன்னிருவகைத் தவத்தையும் சாந்தமாக உருவகித்தமை காண்க.
 

(906)

 
நற்காட்சி, நல்லொழுக்கமாகிய தியானங்கள்
2017. காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் 1கேற்றிய
மாட்சி யுடையார் வதமில ராயினும்
ஆட்சி கரிதன் றமருல கல்லது
மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே.
 
     (இ - ள்.) காட்சி எனும் பெயர் -நற்காட்சி என்று சொல்லப்படுகின்ற, கதிர் விளக்கு
ஏற்றிய - ஒளியுடைய விளக்கைத் தம் உள்ளத்தே ஏற்றிக்கொண்ட, மாட்சியுடையார் -
மாட்சியுடைய சான்றோர், வதம் இலராயினும் - விரதங்களை மேற்கொள்ளாவிடத்தும், அமருலகு ஆட்சிக்கு அரிதன்று - இவர்கள் வானுலகத்தை ஆளுதல் எளிதேயாம், அல்லது
- அல்லாத சுக்லத்தியானம், மீட்சியில் - மீண்டு வருதலில்லாத, பேரின்ப வெள்ளத்து உழவு
- பேரின்பமாகிய வீட்டின்பத்தை நுகர்விக்கும், (எ - று.)

     அமரர் - அமர், எனக் கடைகுறைந்து நின்றது. காட்சி - ஸம்யக் தரிசனம்.

(907)

 
தியானத்தின் சிறப்பு
2018. மெய்ப்பொரு டேறுதல் காட்சி 2விளக்கது
3செய்ப்படு மாயின் வினையென்னுந் தீயிருள்
அப்படி மானு 4நிலையன் றதனைநின்
கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய்.
 
     (இ - ள்.) மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கது - இறைவன் முதலிய
பொருள்கள் எட்டையும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதலே காட்சி என்னும் விளக்காம்,
அது செய்ப்படுமாயின் - அவ்வாராய்ந்து தெளிதல் என்னும் நற்காட்சி
மேற்கொள்ளப்பட்டால், வினையென்னும்
 

     (பாடம்) 1 கேற்றியும். 2 விளக்கத்து. 3 செப்படு 4 நிலையன்றிதனை, நிலையன்றிதனை.