பக்கம் : 1241
 

       தீயிருள் - அறியாமையான் வரும் வினை என்னும் கொடிய இருள், அப்படி மானும்
நிலையன்று - அது நிலையிலே பொருந்துவ தன்றாய்க் கழிவதாம், அதனை - ஆதலின்
அந்நற்காட்சியை, கதிர்மணிப் பூணோய் - சுடருடைய மணி அணிகலன்களையுடையோனே,
நின்கைப் பொருளாக்கொள் - உன்னுடைய கைப்பொருளைப் பேணுமாப்போலே
பேணிக்கொள், (எ - று.)

     இறைவன் முதலிய எண் பொருள் ஆவன :- இறைவன், மெய்ந்நூல் பொருள்,
அளவை, பிரவர்த்தி, லிங்கம், சாரித்திரம், பலம் என்பன. மானுதல் - பொருந்துதல்.

     தியானம் என்னும் விளக்கின்முன் வினையிருள் பொருந்தி நிற்றல் செல்லாதென்பதாம்.

(908)

 

தெய்வ மனிதர் ஆவார் இவர் எனல்

2019. தெய்வ 1மனித ரவரைத் தெளிவுறின்
ஐய விசயனு மாழி வலவனும்
எய்த விவர்முத லீரொன் பதின்மரிவ்
வைய மருள 2வருந ருளரே.
 
     (இ - ள்.) ஐய - ஐயனே, தெய்வ மனிதரவரைத் தெளிவுறின் - இனி, திப்பிய
மனிதர்களை ஆறிய வேண்டின், விசயனும் ஆழிவலவனும் இவர் முதல் எய்த - விசயனும்
திவிட்டனும் முதல்வராக அமைந்த, ஈரொன்பதின்மர் - பதினெண்மராவர், இவ்வையம்
அருள வருநர் உளர் - மேலும் இவரன்னோர் இவ்வுலகத்தைக் காக்கும் பொருட்டு
வருவாரும் உளராவார், (எ - று.)

     திவிட்டன் முதலிய வாசுதேவர் ஒன்பதின்மரும், விசயன் முதலிய பலதேவர்
ஒன்பதின்மரும் இன்னோரன்ன பிறரும், தெய்வ மனிதர் என்றபடி.

     “திவிட்டன், திவிப்பிரட்டன், சுயம்பு, புருடோத்தமன், புருடசிம்மன், புருடவரன்,
புண்டரீகன், இலக்குவன், கிருட்டினன், இவ்வொன்பதின்மரும் வாசுதேவர் எனப்படுவர்.
விசயன், அசலன், தருமன், சுப்பிரபன், சுதரிசனன், நந்தி, நந்தி மித்திரன், இராமன், பத்மன்
இவ் வொன்பதின்மரும் பலதேவர் எனப்படுவர்.

(909)

 
2020. ஆழி யிழந்த வயகண்ட னாதியாப்
பாழி வலவன் பகைவர்மும் மூவரும்
வீழு வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள்
ஊழிதொ றூழி யுலப்பில கண்டாய்.
 
 

     (பாடம்) 1 மனுச. 2 வருவந.