பக்கம் : 1242 | | (இ - ள்.) ஆழி இழந்த அயகண்டன் ஆதியா - தன் சக்கரப் படையை இழந்தொழிந்தவனாகிய அச்சுவகண்டன் முதலிய, பாழிவல - மிக்க ஆற்றலுடைய, வன்பகைவர் மும் மூவரும் - வலிய பகைவர்களாகிய பிரதிவாசுதேவர் ஒன்பதின்மரும், வீழ உரைத்தேன் - விரும்புமாற்றானே கூறாநின்றேன், ஊழிதொறு ஊழி - ஒவ்வோரூழியினும், ஞாலத்துள் உலப்பில கண்டாய் - இவ்வுலகத்தே இத்திப்பிய மனிதராய்ப் பிறக்கும் உயிர்கள் முடிவற்றனவாம், (எ - று.) அச்சுவகண்டன், மேரகன், தாரகன், நிசும்பன், மதுகைடன், புயவலி, பிரகரணன், இராவணன், சராசந்தன் என்னும் இவ் வொன்பதின்மரும் பிரதி வாசுதேவர் என்ப.இவ் வாசுதேவ பிரதி வாசுதேவர்கள் ஊழிதோறும் தோன்றுவர் என்றபடி. | (910) | | | 2021. | தேய வினைவவெல்லுந் தெய்வ மனிசருள் நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட் பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத் தாய திகிரி யவரு மவரே. | (இ - ள்.) தேயவினை வெல்லும் - தேய்ந்திறும்படி இரு வினைகளையும் வெல்லும் இயல்புடைய, தெய்வமனிசருள் - திப்பியருள்ளே, நீயும் ஒருவனை - பயாபதிமன்னனே நீயும் ஒருவனாவாய், நின் குலத்து - உன்னுடைய மரபின், ஆதிக்கண் - தொடக்க காலத்தே தோன்றிய, பாய விழுச்சீர்ப் பரதனை - பரவிய சிறந்த புகழையுடைய பரதனை, உள்ளுறுத்து - உள்ளிட்ட, ஆய திகிரியவரும் அவரே - தோன்றிய சக்கரவர்த்திகளும் திப்பியர்களே ஆவர், (எ - று.) “பரதன், சகரன், மகவான், சனத்குமாரன், சாந்திநாதன். குந்துநாதன், அரநாதன், சுபௌமன், பதுமன், அரிசேனன் செயசேனன், பிரமதத்தன் என்னும் இப்பன்னிரு சக்கரவர்த்திகளும் தெய்வ மனிதர் என்க. | (911) | | தீர்த்தங்கரர் | 2022. | தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும் பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும் ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர் தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார். | (இ - ள்.) தீர்த்தம் சிறக்கும் திருமறு மார்பரும் - பரமாகம வுணர்ச்சியானே சிறப்புடைய திருமகளாகிய மறுவை அணிந்த மார்பையுடையவரும், ஓர்த்து பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும் - | |
| | | |
|
|