போக மனிதர் தலை யிடைகடை என மூவகைப்படுவர். அப்பகுப்பு அவர் தவப் பெருமை சிறுமைபற்றி வந்தது என்க. |
(914) |
போக நிலத்தின் இயல்புணர்த்துவான் ஒரு வரலாறு கூறுதல் |
2025. | அங்கிருவர் 1தம்பதிகள் செய்கையை யறைந்தால் இங்கிருவர் 2செய்கைதமை யெண்ணியறி வாய்நீ தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய் இங்கிருவர் தேவர்கள் வளர்ப்ப 3வியல் கின்றார். |
(இ - ள்.) அங்கு இருவர் தம்பதிகள் - அவ்விடத்தே நுகர்ச்சியை உடைய இரண்டு காதலர்களின், செய்கையை அறைந்தால் - செயல்களை எடுத்துக் கூறினால், நீ இங்கு இருவர் செய்கை தமை யெண்ணி அறிவாய் - இவ்விடத்தே வாழும் இரு காதலர்களின் வாழ்க்கையோடு வைத்து ஆராய்ந்து அவற்றின் பெருமை சிறுமைகளை நீயே உணர்ந்துகொள்க, இங்கு - இப்போக பூமியில், இருவர் - ஓர் ஆடவனும் ஒருமகளும், தம்குரவர் இருவர் மாறு இருவர் தாமாய் - தம் இருமுது குரவருள் வைத்து, ஆடவன் குரவர் இருவர், மாறாய மகளின் குரவர் இருவரும் ஆகி தேவர்கள் வளர்ப்ப வளர்கின்றார் - அமரர்கள் அன்புடன் வளர்க்க வளரா நின்றார், (எ - று.) போக மனிதன் வாழ்க்கைச் சிறப்பை ஒரு தலைவன் தலைவியர்பால் வைத்துக் கூறின் நீ நன்குணர்வை எனக் கூறித் தொடங்குகின்றவர் அப்போக பூமியிலே ஓர் ஆடவனும் பெண்ணும் தோன்றா நின்றனர் என்றார் என்க. |
(915) |
|
2026. | நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான் ஒக்கவரு 4நாள்கள்கலை யோடுட னிறைந்தால் மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித் தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே. |
(இ - ள்.) நக்க குழவிப் பருவம் - இப்போக பூமியிற் பிறந்த இக்காதலர்கள் விளக்கமுடைய குழவிப் பருவம், நாற்பதினோடு ஒன்பான் ஒக்கவரும் நாள்கள் - நாற்பத்தொன்பது என்ற எண் பொருந்தவந்த நாள் அகவையில், கலையோடு உடனிறைந்து - கல்வியோடு கூடி வளர்ச்சி |
|
|
(பாடம்) 1 செய்கையறியும்படி மொழிந்தால். 2 செய்கைகளும் எண்ணி. 3 வளர்கின்றார். 4 நாள்கடலை. |