பக்கம் : 1246 | | மாணிக்கமலையின் பெரிய குவடுகளிலே குங்குமச் சாந்து அப்பப் பட்டாற்போன்ற, மணி மேனியொடு - அழகிய திருமேனியுடனே, ஞாலம் அளிகொண்ட - உலகம் முழுதையும் ஓம்புதலை மேற்கொண்ட, நளிர் - குளிர்ந்த, தாமரை முகத்தான் - தாமரை மலர்போலும் முகத்தை உடைய அம்மகனும், காளை பொலிவுற்றான் - இளமையாற் றிகழ்ந்தான், (எ - று.) காளை - காளைப்பருவம் ஞாலம் அளிகொண்டமுகம், நளிர் தாமரை முகம் என இயைத்துக் கொள்க. குஞ்சிகள் நிறைந்து தாமரை முகத்தோடே மணிமேனியோடு காளைப் பருவமெய்திப் பொலிவுற்றான் என்க. | (918) | | 2029. | தாதுபடு சண்பக மிகந்தநறு மேனிக் காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப் போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள். | (இ - ள்.) தாதுபடு சண்பகம் இகந்த - பூந்துகள் பொருந்திய சண்பக மலரின் மணத்தையும் கடந்த, நறுமேனி - நறுமணங்கமழும் திருமேனியை உடையவளாய், காது புனைகாமர்குழை - செவியின்கண் பெய்யப்பட்ட அழகிய தோடுகளாகிய, பொற்சுருளை - பொன்னால் இயன்ற சுருள்கள், மின்ன - ஒளிருமாறு, கற்பகம் மீதுபடு இளந்தளிர் மிலைச்சி - கற்பகமரத்தின் மிசை தளிர்ப்பதாகிய இளைய தளிரைச் சூடிக்கொண்டு, போதுபுனை கோதையவள் - மலராற் புனையப்பட்ட மாலையையுடைய அக்கன்னி, பூம்பொழில் அணைந்தாள் - ஒரு பூஞ்சோலையிலே புகுந்தாள், (எ - று.) நறுமேனியளாய், பொற்சுருளை மின்ன தளிர் மிலைச்சி, கோதையவள் ஒரு பொழிலிடத்தே உற்றாள் என்க. | (919) | | 2030. | பவழவரை யன்னதிர 1டோட்பரவை 2மார்பன் தவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக் கவழமனை மேவுகளி யானையென வந்தாங் கவிழுமல ரீர்ம்பொழிலு 3ளையனு 4மணைந்தான். | |
| (பாடம்) 1 டோளவரை. 2 மார்வன். 3 ளிளையனு. 4 மடைந்தான். | | |
|
|