பக்கம் : 1247
 

     (இ - ள்.) ஐயனும் - அத்தலைமகனும்,. பவழவரை அன்னதிரள்தோள் - பவழமலை
போன்று திரண்ட தோள்களை உடையவனாய், பரவை மார்பன்
- அகன்ற மார்பையுடைனாய், தவழும் மணி ஆரமொடு - மார்பிலே தவழுகின்ற
மணிவடத்தோடு, தார் மணி தயங்க - மாலையின் அழகு திகது, கவழமனை மேவு களி
யானை என - தான் கவளங்கொள்ளும் கூடத்திற்குச் செல்லும் ஒரு களிறு போன்று வந்து,
வந்து அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் - மலர்ந்த மலர் செறிந்த குளிர்ந்த அப்பொழிலுள்,
ஆங்கு அணைந்தான் - அக்கன்னி நின்ற சூழலை எய்தினான், (எ - று.)

     பரவை மார்பனும் தயங்க யானை என அப்பொழிலை எய்தினான் என்க.

(920)

 
2031. கன்னியவள் மேலிளைய 1காளையிரு கண்ணும்
மன்னுகமழ் தாமரையின் வாயித ழலங்கல்
பின்னியென 2வீழ்ந்தபிணை யன்னவவள் கண்ணும்
துன்னுமிரு நீலமென வந்தெதிர் 3துதைந்த.
 
     (இ - ள்.) கன்னி இவள்மேல் - இக்கன்னியின்மேல், இளைய காளை இருகண்ணும் -
இளமையுடைய இத்தலைமகனுடைய இரண்டு கண்களும், கமழ்மன்னு தாமரையின் வாய்
இதழ் பின்னி அலங்கல் என வீழ்ந்த - மணம் தங்கிய தாமரையின்கண் உள்ள
இதழ்களாலே புனையப்பட்ட மாலைபோல் வீழ்ந்தன, பிணை அன்ன அவள் கண்ணும் -
மான்பிணை போல்பவளாகிய அத் தலைவியினுடைய கண்களும், துன்னும் இரு நீலம் என
- செறிந்த இரண்டு நீலோற்பல மலர்களாலே இயன்ற பிணையலைப் போன்று, வந்து எதிர்
துதைந்த - அவளது நிறைகடந்து வந்து அத்தலைவன் தோள்மேல் பொருந்தின, (எ - று.)

     இளைய காளை யிருகண்ணும் கன்னிமேல் வீழ்ந்த பிணையன்னவள் கண்ணும்
காளைமேல் வீழ்ந்த என்க.

(921)

 
2032. நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும்
வையமகிழ் 4காளையிவன் மாண்டகுண நான்கும்
ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார்
மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம்.
 
     (இ - ள்.) நையும் என நின்ற இடையாள் குணம் ஓர் நான்கும் -
முலைமுதலியவற்றைச் சுமக்கலாற்றாது இது மிக வருந்தா நிற்கும் என்று கூறும்படி நுணுகிய
இடையையுடைய இத்தலைமகட்குச் சிறந்த நாணம்
 

     (பாடம்) 1 காளையன. 2 வீழ்த்தபிணைமன்னும். 3 கலந்த. 4 காளையின.