பக்கம் : 1248
 

     முதலிய பெண்மைக் குணங்கள் நான்கும், வையம் மகிழ்காளையிவன் மாண்டகுணம்
நான்கும் - உலகம் மகிழ்தற்குக் காரணமான பண்புகளையுடைய இத்தலை மகனுக்குச் சிறந்த
அறிவு முதலிய நான்கு ஆண்மைக்குணங்களும், ஐயென அகன்றன - ‘ஐ’ என்னும்
மாத்திரையின் விரைந்து அகன்றனவாக, அணைந்தார் - இருவரும் உள்ளப் புணர்ச்சியில்
ஒன்றுபட்டனர், கனிந்தார் - காமத்தால் உளம் நெகிழ்ந்தனர், மெய்யும் மிடைவுற்ற -
இருவர் உடல்களும் புணர்ந்தன, இதுவால் விதியின் வண்ணம் - இவ்வாறு இவர்தம்
ஊழ்வகை இருப்பதாயிற்று, (எ - று.)

     பெண்மைக் குணங்கள் - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பன ; ஆண்மைக்குணம்,
அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி என்னும் நான்குமாம்.

     இஃது இயற்கைப் புணர்ச்சி கூறிற்று.

(922)

 
2033. அன்றுமுதன் 1மூன்றளவு பல்லமுடி காறும்
சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
நின்றதுபி ராயமது வேநிழலும் வேலோய்.
 
     (இ - ள்.) அன்று முதல் மூன்று அளவு பல்லம் முடிகாறும் - அந்நாள் தொடங்கி
மூன்று பல்லம் என்னும் கால அளவு முடியுந்துணையும், என்றும் இடையின்றி - இடையில்
ஒரு நாளேனும் வீழ்நாள் படாமல், இமையாரின் - தேவர்களைப் போன்று, காமம் -
காமவின்பத்தை, சென்று பெருகி களி சிறந்து நனி நுகர்வார்க்கு - உளம் ஒன்றுபட்டுச்
சென்று ஒரு நாளைக் கொருநாள் புதிது புதிதாய்ப் பெருகும் மகிழ்ச்சியாற் சிறப்புற்று,
மிகுதியும் நுகரா நின்ற அத்தலைமக்களிருவர்க்கும், பிராயம் அதுவே நின்றது -
அவ்விளமைப் பருவமே நிலைத்து நிற்பதாயிற்று, நிழலும் வேலோய் - ஒளிர்கின்ற
வேலேந்தும் அரசனே, (எ - று.)

     அப்போக பூமியில் மூன்று பல்லகாலம் இளமைப்பருவமே நிற்றலால் பெரிதும் இன்பம்
நுகர்தற்கு ஏதுவாம் என்க.

(923)

 
2034. கங்குலவ ணில்லைகலி யில்லைநலி வில்லை
அங்கவர்க ணாளிடைக ழித்தமிர்த யின்றால்
எங்குமில 2வின்பவெழி 3லெய்தறரு மீதால்
தங்கிய தவத்தரசர்க் கீந்தபயன் றானே.
 

     (பாடம்) 1 பல்லமொரு மூன்றுமுடி காறும். 2 வென்ப. 3. அடிகுறிப்பு தரப்படவில்லை.