சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல் |
159. | நங்கை தோன்றிய பின்னகை வேலினாற் கங்கண் ஞாலம மர்ந்தடி மைத்தொழில் தங்க நீண்முடி யாற்றலை நின்றனர் வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே. |
(இ - ள்.) நங்கை தோன்றியபின் - சுயம்பிரபை பிறந்த பிறகு; அம்கண் ஞாலம் - அழகிய இடத்தையுடைய உலக முழுவதும்; நகை வேலினாற்கு - ஒளியுள்ள வேற்படையையுடைய சுவலனசடி யரசனுக்கு; அடிமைத்தொழில் அமர்ந்து தங்க - அடிமை செய்தலில் விரும்பிப்பொருந்த; வெங்கண்யானை விளங்கொளி வேந்தர் - அஞ்சத்தக்க கண்களையுடைய யானைகளையும் விளங்குகின்ற ஒளியையுமுடைய அரசர்கள்; நீள்முடியால் தலைநின்றனர் - நீண்ட முடியினால் நிலத்திற் பணிந்து நின்றார்கள், (எ - று.) சிறந்த பெண்பிறந்த நல்வினைச் சிறப்பால் சுவலனசடி யரசனுக்கு மேன்மேலும் நன்மைகள் பெருகின என்க. ஞாலம் - இடவாகு பெயராய் உலகத்து மக்களை உணர்த்தி நின்றது, சைனநூற் கொள்கையின்படி வித்தியாதர உலகம் நிலவுலகத்தின்பாற்பட்டதே என்பர். |
( 41 ) |
(வேறு) வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல் |
160. | நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளுள் பைங்கண்மால் யானையாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள் வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள். |
(இ - ள்.) வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்த மாதிலகை என்பாள் - கடலிடத்துத் தோன்றிய பவழம்போன்ற சிவந்த வாயையுடைய வயந்த திலகை என்பவள்; நங்கையாள் வளர்ந்து - சுயம்பிரபையானவள் வளர்ந்து; காமநறுமுகை துணரவைத்து - காமமாகிய நல்ல அரும்பானது தோன்றுமாறு |
|
|