பக்கம் : 1253 | | அவர்க்கு மேலவர் என்ற தொடரை ஏற்புழி ஒட்டுக. நமக்கு மேலுள்ள வானின்கண் சௌதர்ம கற்பம் முதலாக அச்சுத கற்பம் வரையிலும் பதினாறு கற்பவுலகங்கள் உள, அவை தொகையா லெட்டும் விரியாற் பதினாறுமாகும் : அவற்றிற்குமேல் ஏட்டிமத்திரயம், மத்தியமத்திரயம் உபரிமத்திரயம் என்ற மூன்று பிரிவினையுடைய நவக்ரைவேயகமும் அதற்கு மேலுள்ள நவாணுதிசையும், பஞ்சாநுத்தரமும் ஆகிய மூன்று அகமிந்திர உலகங்கள் உள, அதற்கு மேலே வீட்டுலகம் உளது. இச்செய்யுளில் ஒன்பதின்மர் என இரட்டித்து வருவதன்கண் முன்னது நவக்ரைவேயகத்தாரையும் ஏனையது நவாணுதிசையாரையும் குறிக்கும். ஐவகையர் என்றது பஞ்சாநுதிசையாரை என்க. | (931) | | பவணதேவர் | 2042. | அருமணியி னொளிநிழற்று மாயிரமாம் பணமணிந்த திருமணிசேர் முடியவருந் 1தீயொழுகு சிகையருமாப் பருமணிய படலஞ்சேர் பவணத்துப் 2பதின்மர்களொண் குருமணிகொ ணெடுமுடியாய் கூறுபா டுடையவரே. | (இ - ள்.) குருமணிகொள் நெடு முடியாய் - நிறமமைந்த மணியாலியன்ற நீண்ட முடியை உடையவனே, அருமணியின் ஒளி நிழற்றும் - பெறலரும் மணிகளாலே ஒளிபரப்புதலையுடைய, ஆயிரமாம் பணம் அணிந்த - ஆயிரம் படங்களையுடைய தலைகளினும் அணியப்பெற்ற, திருமணிசேர் முடியவரும் - தலைமணி பதிக்கப்பட்ட முடிக்கலன்களை யுடையவரும், தீயொழுகு சிகையருமா - தீயைச் சொரிகின்ற தலைச்சூட்டினை உடையவருமாவர், பருமணிய படலம் சேர் - பரிய மணிகளானியன்ற குவியல்கண் மிக்க, பவணத்துப் பதின்மர்கள் - பவண உலகத்தே வாழும் பத்துவகையர் என்னும், கூறுபாடு உடையவர் - கூறுபாட்டையுடைய தேவர்கள், (எ - று.) பவணர் - அசுரகுமாரர், நாககுமாரர், விதயுகுமாரர், சுவணகுமாரர் அக்கினிகுமாரர், வாதகுமாரர், தநிதகுமாரர், உததிகுமாரர் தீபகுமாரர் திக்குமாரர் எனப் பத்து வகைப்படுவர என்க. | (932) | | வியந்தர தேவர் | 2043. | 3கின்னரர்கண் முதலாய வியந்தரரைக் கிளர்ந்துரைப்பின் 4இன்னநர ருலகத்து ளெவ்வழியு முளராகி | |
| (பாடம்) 1 தீயெழு. 2பதின்மரும். 3கின்னரர்முத. 4 இன்னனர். | | |
|
|