பக்கம் : 1254
 
  மென்னரம்பி னிசைகேட்டும் 1வெறியயர்வு கண்டுவந்தும்
மன்னவரை வணங்கியுந்தம் மனமகிழ்வ ரொருசாரார்.
 
     (இ - ள்.) கின்னரர்கண் முதலாய வியந்தரரை - கின்னரர் முதலிய வியந்தரர்களை,
கிளந்து உரைப்பின் - விதந்து ஓது மிடத்தே, இன்னநரர் உலகத்துள் - இந்த
மனிதருலகத்தே, எவ்வழியும் உளராகி - எவ்விடத்தும் வதிவாராகி, மெல் நரம்பின்
இசைகேட்டும் - யாழ் முதலிய நரம்புக் கருவிகளின் இன்னிசையை நுகர்ந்தும், வெறியயர்வு
கண்டு உவந்தும் - வெறியாடல்களைக் கண்டு மகிழ்ந்தும், மன்னவரை வணங்கியும் -
அரசர்களை வணங்கியும், ஒரு சாரார் - இவருள் ஒருசாரார், தம் மனம் மகிழ்வர் - தம்
முள்ளம் பெரிதும் மகிழாநிற்பர், (எ - று.)

     வியந்தரர் - கின்னரர் கிம்புருடர் கருடர் கந்தருவர் இயக்கர் இராக்கதர், பூதர் பிசாசர
என்னும் இவ்வெண்வகையருமாவர்.

(933)

 
2044. குலகிரியு மலையரசுங் குளிர்பொழிலு நளிர்கயமும்
பலகிரியுந் 2தீவகமும் படுகடலும் படிநகரும்
உலகிரிய வெளிப்பட்டு மொளிகரந்து முறைந்தியல்வர்
அலகிரியும் பலகுணத்தோ 3யமரர்களே னைப்பலரே.
 
     (இ - ள்.) குலகிரியும் - குலமலைகளினும், மலையரசும் - இமய மலையினும், குளிர்
பொழிலும் - குளிர்ந்த சோலைகளிடத்தும், நளிர்கயமும் - குளிர்ந்த பொய்கைகளிடத்தும்,
பல கிரியும் - பல்வேறு மலைகளிடத்தும், தீவகமும் - தீவுகளிடத்தும், படுகடலும் -
ஒலிபடும் கடல்களிடத்தும், படிநகரும் - பூமியிலுள்ள நகரங்களிடத்தும், உலகு இரிய
வெளிப்பட்டும் - உலகின் வாழ்வார் அஞ்சி ஓடும்படி வெளிப்பட்டுத் தோன்றியும், ஒளி
கரந்தும் - தம் ஒளியுடைய உருவங்களை மறைத்தும், உறைந்து இயல்வர் - வதிந்து வாழ்வர்
அலகு இரியும் - அளவில்லாத, பல குணத்தோய் - பல நற்குணங்களையுடைய வேந்தனே,
ஏனை அமரர்கள் பலர் - மற்றைய தேவர்கள் பலரும், (எ - று.)

     தேவர்களிற்சிலர் மலைகளிலும் பொழிலிலும் குளங்களிலும் தீவுகளினும் கடலினும்
நகரங்கனினும் மறைந்தும் வெளிப்பட்டும் உறைவார் என்க.

(934)

 
சோதிட தேவர்
2045. சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்
வெந்திறல 4 கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா
 

     (பாடம்) 1வெறியர், வெறியயரக். 2தீவமும். 3யமரர்கனெ. 4 கோட்களுமென.