பக்கம் : 1258 | | அழகுடைய திருமேனியும் வாடாத மாலையும் மழுங்காத ஆடையும் உடையராய் எப்போதும் இன்பமே நுகர்வது தேவரியல்பு என்க. | (940) | | 2051. | பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார் 1கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார் மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனி னல்லால் சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே. | (இ - ள்.) பொன்மாட நெடுநிலத்தார் - பொன்னாலியன்ற மாடங்களாகிய நீளிய நிலத்தின்கண் வதிவோர், புகல் அமளி அணை மேலார் - விரும்புதற்குரிய பூவணைகளில் வதிவோர், கல்மாடு பொன்வளரும் - மணிகளின் பக்கத்தே பொன்கள் பெருகிக் கிடக்கும் கதிர் மணிக்குன்றதன் மேலார் - ஒளியுடைய மாணிக்க மலையின் உச்சியில் வதிவோர், மின் மாடு மிளிர்ந்து இலங்கும் விமானத்தார் - ஒளி பக்கத்தே சுடர்ந்து திகழும் விமானத்தின் கண் வதிவோர், எனின் அல்லால் - என்று கூறுவதல்லது, மாடு சொல் பிறிதில்லை - இவையிற்றிற்கு அயலாகக் கூறுதற்குரிய சொல் வேறு இல்லையாம், சுவர்க்கம் சேர்ந்தவர்கட்கு - வானுலகத் தேவர்களுக்கு, (எ -று.) சுவர்க்கம் சேர்ந்தவர் பொன்மாடமிசையும் அமளியிடத்தும் மணிக்குன்றின் மேலும் விமானத்திலும் உறைந்து மகிழ்வார் என்க. | (941) | | 2052. | 2கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண் டிந்திரனோ டினிதிருந் 3திளம்பிடியார் பாராட்டச் சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால் 4அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே. | (இ - ள்.) கந்தருவக் கோட்டியுள்ளார் - கந்தருவர் கூட்டத்தில் உள்ள தேவர்கள், கண் கனிய - கட்புலன் இன்பத்தின் முதிராநிற்பர், நாடகங்கண்டு - கூத்தாட்டின்பத்தை நுகர்ந்து, இந்திரனோடினிது இருந்து - தம்மரசனாகிய இந்திரனுடைய திருவோலக்கத்தே இனிதாக அமர்ந்திருந்து, இளம்பிடியார் பாராட்ட - இளைய பெண்யானைபோன்ற மகளிர்கள் புகழ்ந்தேத்த, சுந்தர மா மணி மாடச் சூளிகையர் - அழகிய சிறப்புடைய மணிகள் அழுத்தப்பட்ட மாடங்களின் உச்சியில் வதிவார், எனின் அல்லால் - என்று கூறுதலன்றி, அமரர் உலகு அடைந்தவர்க்கு - தேவருலகிற் பிறந்தார்க்கு, மேல் பிறிது அந்தரமில்லை - இவற்றின் மேலாய்க் கூறுதற்குப் பிறிதொரு உவமை யின்றாம், (எ - று.) | |
| (பாடம்) 1 கன்வாடு. 2கந்தர்வக். 3திளப்படியர். 4அந் நேரம். | | |
|
|