பக்கம் : 1259 | | கந்தருவர் நாடகம் கண்டும் இந்திரனோடு இருந்தும் இளம்பிடியார் பாராட்ட மணிமாட உச்சியிலே உறைந்தும் இன்புறுவர் என்க. | (942) | | 2053. | கந்தாரங் களித்தனைய பனிமொழியார் கண்கவர 1மந்தார வளத்திடையார் மணிமுழவி 2னிசையரங்க மந்தார மணியரங்கி னெனும்வார்த்தை யவையல்லால் செந்தாரோய் தேவர்கள் 3செய் திறற்றொழின்மற் றுடையரே. | (இ - ள்.) கந்தாரம் களித்தனைய - கந்தாரம் என்னும் பண்ணை நுகர்ந்து களித்தாற்போன்ற களிப்பை நல்கும், பனி மொழியார் - குளிர்ந்த மொழிபேசும் தேவமகளிரின், கண்கவர - கண்களைக் கவரும் பொருட்டு, மந்தாரவனத்து - கற்பகச் சோலையின்கண் உள்ள, மணிமுழவின் இசை அரங்கம் - அழகிய முழவுகளின் முழக்கத்தையுடைய கூத்தரட்டரங்கும், மணி அரங்கு - அழகிய அவையும், மந்தாரம் - மறைவிடமும், இடையார் - ஆகிய இவற்றினிடைய பயிலாநிற்பர், எனும் வார்த்தை அவை அல்லால் - என்று கூறும் மொழியை அன்றி, செந்தாரோய் - செவ்விய மலர்மாலையை உடைய மன்னனே, தேவர்கள் செய் திறல் தொழில் - அவ்வமரர்கள் வருந்தி ஆற்றலால் ஆற்றுதற்குரிய கடுந்தொழில், வேறு உண்டு என்னும் சொல் மற்றுடையரோ - வேறு பெறற்பாலரோ அல்லர், (எ - று.) மந்தரம் - மந்தாரம் என நீண்டது; மறைவிடம். தேவர்கள் பனிமொழியாருடன் கற்பகச் சோலைகளிலே உள்ள ஆடரங்குகளில் ஆடிப்பாடி இன்புறுவர் என்க. | (943) | | 2054. | தீர்த்தங்க 4டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாம் தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில் கார்த்தங்கு 5மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே. | |
| (பாடம்) 1மந்தாரணத்திடையர். 2 னிசைவாங்க. 3செய்தொழின்மற் றுடையரோ. | 3 டிறைவர்க்குச். 4 மயிலனைய. | | |
|
|