பக்கம் : 1260
 

     (இ - ள்.) தீர்த்தங்கள் திறந்தவர்க்கு சிறப்போடு - தீர்த்தங்கரர்களுக்கு திருவிழாச்
செய்தலோடு, திசையெல்லாம் - திக்குகள் தோறும், தேர்த்து - கூடி, அங்கண் -
அவ்விடத்தே, ஒளிபரப்ப - தம் மொளியைப் பரப்புதற் பொருட்டும், செல்பொழுதும் -
செல்லும் பொழுதும், தார்த்தங்கு வரைமார்ப - மாலையணிந்த மலைபோலும்
தோளையுடைய மன்னனே, கார்த்தங்கு மயில் அனையார் - கார்காலத்தே மகிழ்ந்து
வதிகின்ற மயில் போலும் சாயலையுடைய மகளிரின், காமஞ்சேர் - காமவின்பம் எய்துதற்குக்
காரணமான, கனி கோட்டி - நெஞ்சத்தைக் கனிவிக்கின்ற கூட்டத்தை, தம் உருவின்
அகலார் -தம்முடைய உருவத்தினின்றும் அகற்ற மாட்டார், (எ - று.)

     தேவர்கள் இறைவன் பூசனை விழா முதலியவற்றைக் காணும் போதும் தம்
காதலிமாரைப்பிரியார் என்க.

(944)

 
2055. இமையாத 1செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
அமையாத பிறப்பறிய ரழலறியார் 2பனியறியார்
சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு கெடுமுடியார்
அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே.
 
     (இ - ள்.) இமையாத செங்கண்ணர் - இமைத்தலில்லாத சிவந்த கண்களையுடையராய்,
இரவறியார் - இஃது இராக்காலம் என்றும் அறியமாட்டார், பகல் அறியார் - இது பகற்காலம்
என்றும் அறியமாட்டார், அமையாத பிறப்பு அறியார் - நிலையில்லாத பிறவித்
துன்பத்தையும் அறியமாட்டார், அழல் அறியார் - வெப்பத்தை உணரமாட்டார், பனியறியார்
- பனியாலுண்டாகும் துயரம் உணரமாட்டார், சுமையாகி மணிமாலை சுடர்ந்து இலங்கும்
நெடுமுடியார் - பாரமாக மிக்கு மணிமாலைகள் ஒளிவீசித் திகழ்கின்ற நீண்ட முடியணி
அணிந்தவர் ஆகிய, அமையாத நல்லுலகில் - பெருந்தவம் செய்துடையார்க்கன்றிப்
பொருந்த மாட்டாத நல்ல வானுலகிலே வாழும், நகைமணிப் பூண் அமரர் - விளங்குகின்ற
மணியணிகளையுடைய தேவர்கள், (எ - று.)

     தேவர்கள் இரவு பகலறியார், பிறப்பிறப்பின் துயரறியார், மழை வெயில் பனிகளாலாய
இன்னலிலர் என்க.

(945)

 
2056. அணுவளவாய்ச் சிறுகுதன்மற்
றதிநுட்ப மிகப்பெருகல்
நணியவர்போ னினைத்துழியே
நண்ணுறுதல் விழைதகைமை
 
 

     (பாடம்) 1 செங்கண்ணிரவறியா. 2 குளிரறியார்.