பக்கம் : 1262 | | தேவர்களிலும் நன்ஞானம் நற்காட்சி முதலியவற்றில் சிறந்தோர்க்குச் சிறந்த இன்பமும் அல்லாதார்க்குக் குறைந்த இன்பமுமே உள என்க. | (947) | | 2058. | 1கனைகதிராக் கதிர்கலந்து கண்ணிலங்கு திருமூர்த்தி 2புனைகதிரொண் மணிப்படிவம் பொலிந்ததுபோற் பொலிந்ததன்மேல் வனைகதிரின் மணிமுடியும் மாணிக்கக் கடகமுமென் 3றினமுதலாச் சுடர்ந்தினிதி னியல்பாய்நின் றெரியுமே. | (இ - ள்.) கனைகதிராக் கதிர் கலந்து - செறிந்து சுடருதலையுடைய கதிர்க்கற்றைகள் பரவி, கண்ணிலங்கு - இடமனைத்தும் திகழ்ந்து விளங்கும், திருமூர்த்தி - அருகபரமனுடைய, புனைகதிர் ஒண் மணிப்படிவம் - ஒப்பனை செய்யப்பட்ட ஒளியையுடைய ஒள்ளிய மணியுருவம், பொலிந்தது போற் பொலிந்து - திகழ்வதைப் போன்று ஒளிவட்டத்துடனே விளங்கி, அதன்மேல் - அவ்விளக்கத்தின் மேலும், வனைகதிரின் மணிமுடியும் - இயற்றப்பட்ட ஒளியுடைய முடிக்கலனும், மாணிக்கக் கடகமும் என்று இன முதலா - மாணிக்க மணியாலியன்ற கடக அணியும் என்று கூறப்பட்ட இவற்றின் இனமயாகிய பிற அணிகலன் முதலியனவும், சுடர்ந்து - ஒளிவீசி, இனிதின் - காட்சிக்கின்பமாக, இயல்பாய் - அவ்வானோரின் திருமேனி, தன் இயல்பானே, நின்று எரியும் - நிலைநின்று ஒளிரும், (எ - று.) தேவர்கள் இயல்பாகவே ஒளிவட்டத்தாற் சூழப்பட்டிருப்பர். மேலும் அணிகலன் முதலியவற்றாலும் ஒளிபடைத்துத் திகழ்வர் என்க. | (948) | |
| (பாடம்) 1கணைக்கதிர்க் கதிர். 2புனைகதிர். 3றெனமுதலாச் சுடரணிந்து. | | |
|
|