பக்கம் : 1263
 
 
2059. செழுந்திரட்பூம் 1பாவைகளுந்
     திகழ் 2மணியின் சுடர்க்கொழுந்தும்
எழுந்திலங்கு 3மேனியரா
     4யெரியுமணிக் கலந்தாங்கி
மொழிந்துலவாக் காரிகையார்
     முலைமுற்றா விளமையார்
அழிந்தலராக் காரிகைமா
     ரமரரசர் தேவியரே.
 
     (இ - ள்.) செழுந்திரட்பூம் பாவைகளும் - தாம் கொண்டுள்ள செழித்த மலராலே
புனையப்பெற்ற விளையாட்டுப் பதுமைகளும், திகழ் மணியின் சுடர் கொழுந்தும் -
விளங்குகின்ற மணிகளின் ஒளிக்கதிர்களும், எழுந்து இலங்கும் மேனியராய் - எழுந்து
பரவுகின்ற திருமேனியுடையராய், எரியு மணிக் கலந்தாங்கி - மிளிருகின்ற மணி
அணிகலன்களையும் அணிந்து, மொழிந்து உலவாக் காரிகையார் - கூறிமுடித்தலியலாத
வனப்புடையராய், முலை முற்றா இளமையார் - எப்பொழுதும் முதிராத முலையையுடைய
இளமைப் பருவமே நிலைக்கப்பெற்றவராய், அழிந்து அலராக் காரிகைமார் - அழகழிந்து
பருத்தல் இல்லாத மகளிர்கள் ஆவர், அமரரசர் தேவியர் - தேவ மன்னர்களின்
மனைவிமார்கள், (எ - று.)

     அமரர் தேவியர் இலங்கு மேனியராய்க் கலந்தாங்கி காரிகையுடைய ராய் இளமை மாறாதவராய்த் திகழ்வர் என்க.

(949)

 
2060. இன்பமே பெரிதாகி
     யிடையறவின் றி 5மைப்பளவும்
துன்பமொன் 6றில்லாத
     துறக்கத்திற் பெருஞ்செல்வம்
மன்பெருமா தவத்தினால்
     வருமொருநா 7ளீறுடைய
8தன்பதன்கண் 9மிசையேயென்
     றடிகடரு பொருடெளிந்தார்.
 

     (பாடம்) 1 பாவையும். 2 மணிக்கொழுந்துப்போல். 3 மேனிய. 4 எரிமணிக்.
     5 மைப்பனவும். 6 றில்லாததவத்தாற். 7 றீற்றுடைத். 8என்பதன்கண். 
     9மிசையேயாரடிகடரு.