பக்கம் : 1265 | | | 2062. | இரண்டாகு முதலவர்கட் கேழீரைந் தீரேழாய்த் 1திரண்டிரண்டாய் மூவுலகத் 2தொழிந்தவர்சேர் பிரண்டிரண்டாய் 3அரண்டகவந் தேறிப்பின் னாரணவச் சுதருலகின் மருண்டாய மணிமுந்நீர் பதி 4னொன்றற் கிருமடியே. | (இ - ள்.) இரண்டாகும் முதலவர்க்கு - பவணர்களைக் காட்டினும் இருமடி வியந்தார்க்கு ஆகும் வாழ்நாள், ஏழ் ஈரைந்து ஈர் ஏழ் ஆய்த் திரண்டு - எஞ்சிய மேல்மேல் உயர்ந்த தேவர்கட்கு முறையே ஏழுகடலும் பத்துக்கடலும் பதினான்கு கடலுமாய்ப் பெருகி, இரண்டாய் - மேலும் இரண்டு சேர்ந்து பதினாறு கடலுமாய், மூவுலகத்து ஒழிந்தவர் - மூவகைப் பட்ட இத் தேவபூமியின் மேற்பட்டவர்கட்கு, இரண்டு இரண்டாய் சேர்பு - மேலும் இரண்டு இரண்டு கடல்களைக் கூட்டிப் பதினெட்டும் இருபதுமாய், அரண்தக வந்து ஏறி - தம் வாழ்நாள் காவல் பொருந்தச் சென்று உயர்ந்து, ஆரண அச்சுதர் உலகின் - மறை பயின்ற அச்சுதருலகத்தின்கண் வாழ்வார்க்கு, மருண்டு ஆய மணிமுந்நீர் - வியப்பைத் தருதற்குரிய பெருமைத்தாய கடல், பதினொன்றற்கு இருமடி-இருபத்திரண்டாம், (எ - று.) | (952) | | 2063. | ஆங்கவர்மே லமரரசர் மும்மூவர்க் கொரோவொன்றாய் ஓங்கினர்மே லொன்பதின்மர்க் கொன்றொன்றா யவர் 5மேலார் 6பாங்கினுறப் பெருகுவன பதினைந்திற் 7கிருமடிமேல் 8வாங்கொலிநீ ரொருமூன்று வாழ்வென்ப மணிமுடியாய். | |
| (பாடம்) 1 திரண்டதன். 2ஒழிந்தவர்கட். 3 உரண்டகவந். 4 னொன்றிற். 5மேலாற். 6பாங்கினிற். 7கிருமடிய. 8ஓங்கொலிநீ. | | |
|
|