பக்கம் : 1266 | | (இ - ள்.) ஆங்கு அவர்மேல் அமரரசர் மும்மூவர்க்கு - அவ்வச்சுத உலகில் வாழ்வார்க்கு உயர்ந்த அகமிந்திரலோகத்தின் ஒருபகுதியில் வாழும் அகமிந்திரதேவர் ஒன்பது வகையார்க்கும் ஒரோ ஒன்றாய் - ஒவ்வொரு கடலாய் உயர்ந்து, ஓங்கினர் மேல் ஒன்பதின்மர்க்கு - அவரினும் உயர்ந்த, நாவணு திசையில் வாழும் ஒன்பது வகையார்க்கு, ஒன்று ஒன்றாய் உயர்ந்து - ஒவ்வொரு கடல் உயர்ந்து, அவர் மேலார் - அவரினும் உயர்ந்தோராய், பஞ்சாநுத்தரத்தில் வாழும் தேவர்கட்கு, பாங்கின் உறப் பெருகுவன - அவ்வெண்ணயலே கூடிப் பெருகும் வாழ்நாள், வாங்கு ஒலிநீர் - கடல், பதினைந்திற்கு இருமடிமேல் ஒருமூன்று வாழ்வு என்ப - முப்பத்து மூன்று வாழ்நாள் எல்லை என்று அறிஞர்கள் கூறுப, மணிமுடியாய் - மணியழுத்திய முடியை உடைய அரசனே, (எ - று.) வாங்கொலி நீர் என்றது, கடல் என்னும் பெயர்மாத்திரையாய் எண் குறித்து நின்றது. | (953) | | 2064. | ஆயிடைய வமரரசர் திறம்வினவி னணங்கணையார் 1வேயிடைமென் பணைப்பொற்றோள் விழைவின்றிப் பெரிதாகி 2ஏயிடையோ ரறவின்றா வின்பஞ்செய் திருமூர்த்தி 3சேயிடையொள் ளொளிநிழற்றச் செம்மாந்தா ரிருந்தாரே. | (இ - ள்.) ஆயிடைய அமரரசர் திறம் வினவின் - கற்பலோகத்தின் மேலவாய அகமிந்திரலோக முதலியவற்றுள் வாழும் தேவ மன்னர்களின் தன்மையை வினவுதியாயின், அணங்கு அணையார் - தெய்வ மகளிர்களுடைய அணையை ஒத்த, வேயிடை - மூங்கில்கள் வருந்தும், மென் பணைத்தோள் - மெல்லிய பருத்த தோளின்கட் படிதற்கு, விழைவின்றி - விரும்பாதபடி, பெரிதாகி - மிக்கு, ஏய் இடை (ஓர்) அறவு இன்றாய் - பொருந்தும் இடையறவு சிறிதும் இன்றி, இன்பம் செய் திருமூர்த்தி - இன்பத்தை விளைக்கின்ற அருகபரமனுடைய ஒளிவட்டத்தின்; சேய் இடை ஒள்ளொளி நிழற்ற - சேய்மைக் கண்ணதாகிய மிக்க ஒளி தம்மேற் பரவாநிற்ப, செம்மாந்தர் இருந்தாரே - யாரே எம்மை ஒப்பார் என்று செம்மாந்து வீற்றிருந்தனர், ஓர் : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1 வேயிடைப் பணைமென்றோள். 2 ஏயிடையறவின்றாயுறவின்றா. 3 சேயிடை ஒளிநிழற்ற. | | |
|
|