பக்கம் : 1267 | | | 2065. | ஊனிலா 1வுறுப்பமையா வொளியமா வுலகெல்லாம் பானிலாப் பரந்தெறிப்பப் 2பளிங்கினது படிவம்போன் மேனிலா மணியனையார் வெண்சங்கே ரிலைச்சையாம் 3கோனிலா வவரின்மிக் கவரில்லைக் குடைவேந்தே. | (இ - ள்.) ஊனிலா உறுப்பமையா - ஊன் பொருந்தாத சூக்கும உடல் அமையப்பெற்று, மா உலகெல்லாம் - பெரிய உலக முழுதும், ஒளிய - ஒளியுடைய, பால் நிலாப் பரந்தெறிப்ப - பால் போன்ற தம்முடல் ஒளியாகிய நிலாப் பரவித் திகழாநிற்ப, பளிங்கினதுபடிவம் போல் - பளிங்காலியன்ற பிரதிமையைப் போன்ற வடிவும், வெண்சங்கு ஏர் இலைச்சையாம் - வெள்ளிய சங்கினது அழகிய வன்னத்தையும் உடையராய், மேல் நிலாம் - விண்ணிலே நிலவுகின்ற, மணியனையார் - மணிகளை ஒத்த அவ்வமர மன்னர்களாகிய, கோனிலா அவரின் - தாமே தலைவராவதல்லால் தமக்கொரு தலைவனை இல்லாதவர்களின், மிக்கவர் - உயர்ந்தோர், இல்லை - தேவர்களில் வேறிலர், குடைவேந்தே - சந்திரவட்டக் குடையையுடைய மன்னனே, (எ - று.) இலைச்சை - வன்னம் | (954) | | 2066. | 4அப்பால தத்திதியா 5மதனிலமைந் 6தாலூணின் 7றொப்பாரும் பிறிதிவணின் றூழிநாட் 8பெயர்ந்திழிவின் றெப்பாலுந் 9திரிவின்றோ ரியல்பாய வின்பத்தான் மெய்ப்பால 10தவ்வரைசர் வீற்றிருக்கும் வியனுலகே. | (இ - ள்.) அப்பாலது - அவ்வுலகத்தின் அப்புறத்திலுள்ளது, அத்திதி யாம் - அத்தித்துவமாம் ஆகும், அதனில் அமைந்தால் - அதன்கட் சென்றமைந்தால், ஊண் இன்று - அங்கு நுகர்ச்சி இல்லையாம், ஒப்பாரும் பிறிது இவண்இன்று - அவ்வுலகின் வாழ்வாரை ஒப்பவர் பிறர் யாரும் இங்கில்லை, ஊழிநாட் பெயர்ந்து இழிவின்று - ஊழிபல சென்றும் அவ்விடத்தினின்று இழிவதும் இல்லை, எப்பாலும் திரிவு இன்று - எப்பகுதி யாயினு திரிவுடைய தில்லையாய், இயல்பாய இன்பந்தான் - உயிரின் பண்பாகிய பேரின்பத்தை, மெய்ப்பாலது - மெய்யாகக் கண்டு நுகரும் தன்மைத்து, அவ்வரைசர் வீற்றிருக்கும் வியன் உலகு - அத்தவ வேந்தர் நிலைத்து அமர்ந்திருக்கும் அவ்விரிந்த வீட்டுலகம், (எ - று.) அத்திதி - அஸ்தித்துவம் என்னும் தேவருலகம். | (955) | |
| (பாடம்) 1 உறுப்பமைத்தொளியமா. 2 பளிங்கினற். 3 கோணிலா. 4அப்பாலத். 5 மதனிலைமைந். 6தூணின். 7 ஒப்பாரி. 8 பெயர்ந்தழிவின். 9திரிவின். 10தவவரைசர். | | |
|
|