பக்கம் : 1272 | | “ஆனாலும் அதன் பெருமை யார்க்கியார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்“ என்றார் பிறரும். வீடுபேற்றுநிலை மெய்யறிவுச் செல்வர்கட்கன்றி மற்றையோர்க்கு எளிதில் அறிதற்கரியது என்றபடி. | ( 5 ) | வீடுபேற்றின் இயல்பு | 2074. | மணிமலர்ந் 1துமிழொளி வனப்புஞ் சந்தனத் துணிமலர்ந் துமிழ்தருந் 2தண்மைத் தோற்றமும் 3நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால் அணிவரு சிவகதி யாவ தின்பமே. | (இ - ள்.) மணி மலர்ந்து உமிழ் ஒளி வனப்பும் - மணியும் அது விரித்து வீசும் ஒளியின் எழிலும், சந்தனத் துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மைத் தோற்றமும் - சந்தனக் கட்டையும் அது குழம்பாய்ப் பெருகி நல்கும் தட்பத்தின் பண்பும், நணி மலர் நாற்றமும் - புதுவதாய் மலர்ந்த மலரும் அது தரும் நறுமணமும், என்ன - எத்தன்மையன, அன்னதால் - அத்தன்மைத்து, அணிவு அரு - புனைந்துரைத்தற்கும் அரிய, சிவகதியாவது இன்பமே - வீட்டின்கண் சென்ற உயிரும் அது எய்தும் இன்பமும், (எ - று.) “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.“ என்னும் திருநாவுக்கரசர் வாக்குடன் இதனை ஒப்புநோக்குக. ..........புஷ்ப சௌரபம் போலவும், சந்தந சைத்யம் போலவும், ரத்ந தீப்தி போலவும், தனக்குச் சுபாவமாகிய அநந்தக்ஞான, தர்சன, சுக வீர்ய, நிர்நாம, நிர்க்கோத்ர நிராயுஷ்ய சகல சம்யக்தவ பாவமென்னும் சுத்தாஷ்ட குணங்களைப்ராபித்து, அவ்வண்ணம் ஆகால பர்யந்தம், பரமாத்மாவினுடைய அசல முத்தி பதாவஸ்த்தானமாகும். (அஷ்ட பதார்த்த சாரம்). | ( 6 ) |
| (பாடம்) 1 துமிழ்தரு மொளியும். 2 தன்மைத். 3 மணிமலர். | | |
|
|