இசைக்குப் பரிசில் |
163. | கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர் 1படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக் கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே. |
(இ - ள்.) காமர் - அழகிய ; மலர்படி தும்பி என்னும் - மலர்களிற் படிகின்ற தும்பியென்று சொல்லப்பெறுகின்ற; பாண்படை - பாணர்களின் கூட்டம்; கடிமலர்க் கணையினான் தன் கழலடி பரவி - மணமுள்ள மலர்களாகிய கணைகளையுடையவனான காமனது வெற்றிக் கழலையணிந்த அடிகளைப்போற்றி; தொடர்ந்துபாட - இடைவிடாமல் பாடுதலைச் செய்ய; கொடிவளர் மகளிர் - பூங்கொடிகளாகிய வளருகின்ற மாதர்கள்; அப்பாணர் களாகிய வண்டுகளைப் பார்த்து; பூ கள் குடைந்து நீர் குடிமின் என்று - மலர்களில் உண்டாகின்ற தேனில் மூழ்கி அதனை நீங்கள் குடியுங்களென்று; வடிமலர் வள்ளத்து ஏந்த - சிறந்த தம் மலர்களாகிய கிண்ணத்திலே ஏந்த; வாய்மடுத்திட்ட - அதனை வாய்வைத்துக் குடித்தன; (எ - று.) அன்றே: ஈற்றசை. பாணர் - புகழ்ச்சிப் பாடல்களைப் பாடும் ஒருவகைக் கீழ் வகுப்பார். கட்குடித்தல் அவர்கட்கு இயல்பு. வண்டுகள் ரீங்காரஞ்செய்து தொடர்ந்து வருகையில் பூங்கொடிகளில் அரும்புகள் தேனோடு மலர அம்மலர்த்தேனை வண்டுகள் குடைந்து வாய்வைத்துப் பருகும் பாணர் கூட்டம் தொடர்ந்து இசைபாடுகையில் அப்பாட்டிற்கு உவந்து மாதர் கிண்ணத்தில் கள்ளைக் கொண்டுவந்து அவர்க்குத்தர அவர்கள் அதனை வாய்க்கொண்டு பருகும் இயல்பை வண்டுகளின் மேலேற்றிக் கூறினார். |
( 45 ) |
தீயிடத்துக்கரியைப்போல மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல் |
164. | அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த் துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம் செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி மஞ்சுடை மயங்கு கானம் 2மண்டிய வகையிற் றன்றே. |
|
|
(பாடம்) 1. கொடியமலர்த் தும்பி. 2. மங்கிய |