பக்கம் : 1280 | | “காதலா ராபவர் கற்ற மாந்தரே“ என்றமையால் “யாரையும்“ என்றது, கல்லாத புல்லரையும் என்றவாறாம். இதன்கட் சிற்றினம் சேராமையும், பெரியாரைத் துணைக்கோடலும் கூறப்பட்டன. பொருள் ஆகூழாற் றோன்றுமிடத்தும், அதன்கட் பெரும் பற்று உடையராகாமல் அதன் இயல்பறிந்து அப்பொருளால் அடையற்பாலன வாகிய அறமுதற் பொருள்களை எய்துதல் வேண்டும் என்றபடி. | ( 18 ) | நிலமகளின் இயல்பு | 2087. | நிலமக ணிலைமையு நெறியிற் 1கேட்டிரேல் குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள் வலமிகு சூழ்ச்சியார் 2வழியண் மற்றவள் உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர். | (இ - ள்.) உலம் மிகு வயிரத்தோள் - குண்டுக்கல் போன்று பருத்த திண்ணிய தோளையுடைய, உருவத் தாரினீர் - அழகிய மாலையணிந்த மைந்தீர்!, நிலமகள் நிலைமையும் - நிலமடந்தையின் இயல்பினையும், நெறியில் கேட்டிரேல் - முறையானே வினவுதிராயின், மற்றவள் - அந்நிலமகள், குலமிலர் - இவர் உயர்குடிப் பிறந்தாரல்லர், குணமிலர் - இவர் நற்குணங்களை உடையர் அல்லர், என்னும் - என்று கருதிப்பார்க்கும். கோள் இலள் - கொள்கை இல்லாதவளாய், வலம் மிகு சூழ்ச்சியார் - ஆற்றல்மிக்க சூழ்வினையுடையாரின், வழியள் - வழிச்செல்பவள் ஆவள், (எ - று.) தன்னைப் பெரிதும் காதலித்து வருந்தித் தனக்கு நாயகனாகிய மன்னன் பகைவரால் கொல்லப்பட்ட பொழுதே நிலம் மற்றொருவனுக்கு உரிமையாய் விடும் நற்குணமுடைய அரசனிடத்திலேதான் நிலம் நிலைத்திருக்கும் என்பதுமில்லை; நற்குணமில்லாவிடினும், உடல்வலி படைவலி மிக்கவர்களுக்கே நிலம் உரிமையுடையதாகும். ஆதலால், நிலச் செல்வம் போற்றப்படத் தகுந்த மாண்புடைய தாகாது என்பதாம். | ( 19 ) | | 2088. | தன்னுயர் மணலினும் பலர்க டன்னலம் முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர் | | |
| (பாடம்) 1 கேட்டிரால். 2 வழியின். | | |
|
|