பக்கம் : 1285
 

விசயதிவிட்டர்கள், தந்தையாகிய பயாபதி வேந்தன் துறவுமேற் கொண்டு தம்மைத் துறந்து
நீங்குவான் என்று எண்ணி, மனம் வருந்திப் புலம்புதலை நேரிற் கண்டும், அவர்
பொருட்டுத் தான் மனங்குழம்பாமல் நின்று பேசுதலின், அம்மன்னனுடைய பற்றறுதி
விளங்குவதாயிற் றென்க.
 

( 26 )
பயாபதிமன்னன் றேவியர் துறவு எய்துதல்
2095. ஆவியா 1யரும்பெற லமிர்த மாகிய
தேவிமார் தங்களைக் கூவிச் செவ்வனே
காவியாய் நெடுங்கணீர் கருதிற் றென்னென
மேவினார் தவமவர் வேந்தன் முன்னரே.
 
     (இ - ள்.) ஆவியாய் - தனக்கு உயிர் ஆகி, அரும்பெறல் அமிர்தம் ஆகிய -
அவ்வுயிர் தளிர்த்தற்குரிய பெறற்கரிய அமிழ்தும் ஆகிய, தேவிமார் தங்களை - தன்
மனைவியராகிய மிகாபதி முதலியோரை, கூவி - அழைத்து, காவி ஆய் நெடுங்கணீர் -
நீலோற்பல மலரோ என்று ஆராய்தற்குரிய நீண்ட கண்களையுடையீர், செவ்வனே கருதிற்று
என் என - நீயிர் செவ்விதாக இப்பொழுது எண்ணுவது யாது கூறுங்கோள் என, அவர் -
அக் கற்புடைத் தேவிமார், வேந்தன் முன்னரே - பயாபதி மன்னனுக்கு முன்பே, தவம்
மேவினார் - தவவொழுக்கத்தை மேற்கொண்டனர், (எ - று.)

     பயாபதி தன் மனைவியரை அழைத்து யான் துறவுபூணத் துணிந்தேன் உங்கள் கருத்து
யாது கூறுங்கள் என்று வினவிய வினாவிற்கு, விடைகூறாமலே தாம் துறவுபூண்டு செயலாலே
தங் கருத்தினை அத் தேவியர் மன்னனுக்கு விளக்கினார் என்க.
 

( 27 )

அமைச்சர்களின் துறவு

2096. இமைப்பதும் பெருமிகை யினியி ருந்தென
நமைப்புறு பிறவிநோய் நடுங்க 2நோற்கிய
அமைச்சரு மரசர்கோ னருளி னாற்றம
சுமைப்பெரும் பாரத்தின் றொழுதி நீக்கினார்.
 
    

 


     (பாடம்) 1 ரரும் பெற. 2 நோக்கிய.