பக்கம் : 1286
 

     (இ - ள்.) இனி இருந்து இமைப்பதும் பெருமிகை என - இனி இந்நிலையிலேயே
இருந்து இமைத்தல்தானும் பெரிதும் மிகையாய குற்றமாம் என்று கருதி, நமைப்பு உறு -
துன்பம் பொருந்திய, பிறவிநோய் - பிறப்பாகிய நோய், நடுங்க - நோய் கொண்டு
நடுங்கும்படி, நோற்கிய - நோன்பாற்றற்கு, அரசர் கோன் அருளினால் - மன்னர்
மன்னனாகிய பயாபதியின் அருள் பெற்றவராய், அமைச்சரும் - அமைச்சர்களும், தம் சுமைப்பெரும் பாரத்தின் தொழுதி - தம்முடைய சுமையாகிய மிக்க பாரத்தின் திரட்சியை,
நீக்கினார் - துறந்தார்கள், (எ - று.)

     தொழுதி - கூட்டம். நோற்கிய - நோற்க; செவ்விய என்னும் வாய் பாட்டெச்சம்.
பயாபதி மன்னன் தன் அமைச்சர்கள் துறவுபூண்பதும் தகுதியே என்னும்
குறிப்புடையனாதலை அமைச்சர்கள் உணர்ந்துகொண்டு துறவு மேற்கொண்டனர் என்க.
 

( 28 )
பயாபதி அணிகலன் களைதல்
2097. அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
மணிமுடி யமிர்தநீ ராடி மாதவர்
பணியொடு பன்மணிக் கலன்க ணீக்கினான்
துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே.
 
     (இ - ள்.) அணிமுடி அமரர் தந்து ஆற்ற - அழகிய முடிக்கலனுடைய தேவர்கள
கொணர்ந்துதர, பாற்கடல் அமிழ்த நீர் - பாற்கடலினுளதாகிய அமிழ்தத் தன்மையுடைய
பாலாகிய நீராலே, மணிமுடி ஆடி - அழகிய தலைமுழுகி, மாதவர் பணியொடு - சிறந்த
துறவியரை வணங்குதலுடனே, பன்மணிக் கலன்கள் நீக்கினான் - பலவாகிய
மணியணிகலன்களைக் களைந்து நீக்கினான், துணிவொடு - அறிவுத் தெளிவுடனே, சுரமை
நாடு உடைய தோன்றல் - அவன் யாரெனில், சுரமை நாட்டிற்கு மன்னனாகிய புகழ்மிக்க
பயாபதி, (எ - று.)

     மாதவர் பணியொடு - துறவிகளின் ஏவலுடனே எனினும் ஆம் செயற்கரிய செயலாகிய
தவம் செய்தற்குத் துணிவுடைமை இன்றியமையாது வேண்டப்படுதலின், துணிவொடு...
நீக்கினான் என்றார். துணிதலாவது மெய்யறிவு எய்தித் தெளிவுடையனாதல். சுரமை
நாடுடைய தோன்றல் என்றது பயாபதி துறத்தற்குத் துணிந்த பொருளின் சிறப்பை விளக்கி
இத்தனைச் சிறப்புடைய பொருள்களையும் துணிவொடு துறந்தான் எனப் பயாபதியின்
பெருமையைச் சிறப்பித்தமை காண்க.
 

( 29 )

பயாபதியின் திருமுடி பாற்கடலில் இடப்படுதல்

2098. அருமுடி 1துறந்தன னரச னாயிடைத்
2திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
 
    

 


     (பாடம்) 1 துறந்துத. 2 திருமுடித் துணர்.