பக்கம் : 1287 | | | | பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல் பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே. | (இ - ள்.) அருமுடி துறந்தனன் அரசன் - பெறலரும் முடியணியைப் பயாபதி வேந்தன் அகற்றினனாக, ஆயிடை - அப்பொழுது, திருமுடி - அழகிய முடிக்கலன்மிசை, மணித்துணர் தேவர் - அழகிய கற்பகப் பூக்கொத்தைச் சூடியுள்ள அமரர்களால், பருமுடி கொண்டுபோய் - அப் பரிய முடியினை ஏந்திச் சென்று, நீரை அன பரவைப் பாற்கடல் - வரிசையாக அன்னங்கள் நீந்துதலையுடைய அகன்ற பாற்கடலின் நாப்பண், பெருமுடி அமைகென - பெரிய முடியே நீ இதன்கண் அமைவாயாக என்று கூறி, பெய்யப்பட்டதே - விடப்பட்டது, (எ - று.) பெருமுடி : விளி வேற்றுமை. முடியைப் பெறாதவழிப் பெறுதலும். பெற்ற வழி அதை இழக்கத் துணிதலும் மிக அரிதாகலின் - அருமுடி யென்றார். முடியைப் பாற்கடலில் பெய்தனர் தேவர்கள் என்றது. அம்முடியின் அருமை, தெய்வத்தன்மை முதலியவற்றை விளக்கி நிற்றல் காண்க. | ( 30 ) | வேறு அரசர் ஆயிரவர் துறத்தல் | 2099. | முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும் திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய் அரைசரு மாயிர ரரைசர் கோனொடு விரைசெறி மணிமுடி 1விலங்க நீக்கினார். | (இ - ள்.) முரைசு அதிர்முழங்கு ஒலி மூரித் தானையும் - முரசங்கள் அதிர்ந்து முழங்கு தலாலாகிய ஒலியையுடைய பெரிய படைகளையும், திரைசெறி வளாகமும் - கடல் சூழ்ந்த நிலத்தையும், சிறுவர்க்கு ஈந்து போய் - தத்தம் மகாருக்கு வழங்கி விட்டுச் சென்று, அரசரும் - ஏனைய மன்னர்களும் ஆயிரர் - ஓராயிரவர், அரைசர் கோனொடு - பயாபதி வேந்தனோடே, விரைசெறி மணிமுடி - மலர் நிறைந்த மணிகள் அழுத்திய தத்தம் முடிக்கலன்களை, விலங்க நீக்கினார் - அகலத் துறந்தனர், (எ - று.) விலங்க நீக்கினார் என்றது, புறத்தே நீக்குதன் மாத்திரையின்றி அகத்தேயும் பற்றறத் துறந்தனர் என்பதாம். அரைசரும் - என்றதன் கண் உம்மை, இறந்தது தழீஇச் சிறப்பும் குறித்து நின்றது. | ( 31 ) | | 2100. | முடிகளுங் கடகமு முத்தி னாரமும் சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும் | | |
| (பாடம்) 1 விளங்க நீக்கினார். | | |
|
|