பக்கம் : 1290
 

 

2104. தாதுக வகலத்துத் தாமம் வாங்கியும்
மீதுவந் தேறியு மேவல் 1செய்யுநம்
கோதுக மியாவர்கொண் டாடு வாரெனப்
போதுக முடியினர் புலம்பொ டேகினார்.
 
     (இ - ள்.) தாது உக அகலத்துத் தாமம் வாங்கியும் - பூந்துகள்கள் உதிருமாறு
மார்பிடத்தே கிடைக்கும் மாலைகளைப் பரிந்தும், மீது உவந்து ஏறியும் -
திருமேனியின்மேல் மகிழ்ச்சியுடனே ஏறுதலைச்செய்தும், மேவல் செய்யும் - பொருந்துதலைச்
செய்யும், நம் - நம்முடைய, கோதுகம் - குறும்புகளையே, கொண்டாடுவார் யார் -
குணமாகக் கொண்டுமகிழ்வார் இனி எமக்கு யாருளர், என - என்று கூறி, போது உகு
அம்முடியினர் - மலர்கள் உதிராநின்ற முடியையுடைய அவ்விசய திவிட்டர்கள், புலம்பொடு
- துயரத்துடனே, ஏகினர் - சென்றனர், (எ - று.)

     தம் தந்தை தம்பாற் செலுத்திய அன்புடைமையை நினைந்து நினைந்து வருந்திப்
போயினர் என்க.

     கோதுகம் - குறும்புச்செயல். தம்மக்கள் “இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,“ இன்னோரன்ன குறும்புச் செயல்களை
இயற்றுதலையே ஈன்றோர் பேரின்பமாகக் கொண்டு அச்செயலைக் கொண்டாடுதலும்
இயல்பாம்; ஆதலின் “கோதுகம் கொண்டாடுவார் இனி யாவர்“ என்று இரங்கினர் என்பதாம்.
 

( 36 )

விசயதிவிட்டர்கட்கு முனிவர் கூறும் தேற்றரவு

2105. நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார்.
 
     (இ - ள்.) நின்றிலா நிலைமையின் நீங்கி - நிலையுதலில்லாததோர் உலகியல்
வாழ்வின் நிலையினின்றும் அகன்று, நின்றதோர் வென்றியால் - நிலைத்து நிற்றலைப்
பெறுவதொரு வெற்றி பெறுமாற்றானே, உலகுடன் வணக்கும் வீரியம் - உலகம் எல்லாம்
தன்னை வணங்குமாறு செய்துகொண்ட பேராண்மையை, இன்று கோன் புரிந்ததற்கு - இன்று
அரசன் செய்தமைக்கு, இரங்கல் வேண்டுமோ - (மகிழ்தல் நிற்க) வருந்துதலும் வேண்டுமோ,
என்றுதான் - என்று எடுத்துக்கூறி, இளையரை - விசய திவிட்டர்களை, முனிவர்-துறவி,
தேற்றினார் - தேற்றரவு செய்தனர், (எ - று.)
 

     (பாடம்) 1 செய்யநம்.மயே ஆகும் என்று கூறி அழுது விசயதிவிட்டர்கள் சென்றனர் என்க.