பக்கம் : 1297
 

 

  முறையினாற் பெருகு முள்ளச்
     சமாதிநீர் முறுக வுண்ட
குறைவிலாத் தியான மென்னுங்
     கொற்றவா ளுருவிக் கொண்டான்.
 
     (இ - ள்.) நிறையிலார் - மூவகை அடக்கமும் இலாதார், பொறுத்தல் ஆற்றா
நிலையிது - தாங்குதல் இயலாத இவ்வுயரிய நிலையின்கண் நின்று, நிறைந்த நோன்மை -
பெருகிய ஆற்றலுண்மையால், கறையில் ஈர் ஆறுக் கொத்த கண்ணியர் - குற்றமற்ற
பன்னிருவராகிய மாலையினையுடையார், கவரிவீச - சாமரையிரட்டாநிற்ப, முறையினாற்
பெருகும் உள்ளச் சமாதி நீர் முறுக உண்ட - படிப்படியாக மிகாநின்ற மெய்யுணர்ச்சி
யென்னும் அமிழ்தநீரை மிக்குண்ட, குறைவிலாத் தியானம் என்னும் - குற்றமற்ற தியானம்
என்று கூறப்படும், கொற்றவாள் உருவிக் கொண்டான் - வெற்றிக்குக் காரணமான வாளை
உறை கழித்துக் கைக்கொண்டான், (எ - று.)

     பன்னிருவர் - துவாதாசாநுப் பிரேக்ஷைகள். தரும சுக்கிலத் தியானப் பயிற்சியே
நாளடைவில் உயிரின் குற்றங்களைக் தேய்த் தொழித்தற்குரிய கருவியாதலின் “தியான வாள்“
என்றார்.
     அநுப்பிரேக்ஷைகள் பன்னிரண்டும் கவரியிரட்டும் மகளிராக உருவகிக்கப்பட்டன.
 

( 47 )

 

2116. விண்கடாஞ் செய்யும் வெய்ய
     வினைவர்கட் கரண மாகிக்
கண்கடா மறைக்கு மோரேழ்
     கடிவினை பொடிசெய் திட்டே
1எண்கடா நவின்ற வீரெண்
     கொடிமதிற் கோட்டை கட்டி
எண்கடா முடைய வெண்மர்
     குறும்பரை யெறிந்து வீழ்ந்தார்
 
     (இ - ள்.) விண்கள் தாம் செய்யும் வெய்ய - வீண்செயல்களையே செய்யாநின்ற
கொடிய, வினைவர்கட்கு - இருவினைப் பகைவர்கட்கு, அரணமாகி - காவலாகப் பொருந்தி,
கண்கடாம் மறைக்கும் - ஞானக்கண்களை மறையாநின்ற, ஓர் ஏழ் கடிவினை பொடி
செய்திட்டு - ஓர் ஏழாகிய கொடிய தரிசனமோகநீயம் என்னும் வினைகளைச் சுட்டுத் துகள்
செய்து, எண்கள் தாம் நவின்ற - எண்ணிக் கூறப்பட்ட, ஈர் எண்கொடிமதில் கோட்டை
கட்டி - சோடச கர்மமென்கிற கொடியையும் மதிலையும் உடைய வலிய கோட்டையைக்
கட்டிக்கொண்டு, எண்கள்தாம் உடைய எண்மர் குறும்பரை யெறிந்து வீழ்த்தார் -
ஆராய்தற்கு உரிய பிரத்யாப்பிரத்தி யாக்யானம் என்னும் எட்டுக் கயவர்களையும் கொன்று
தள்ளினான், (எ - று.)
 

     (பாடம்) 1 கொண்கடா.