பக்கம் : 1298
 

     எண்கடாம் உடைய எண்மர் குறும்பர் என்றது, வெகுளி முதலிய வற்றை. விளக்கம்
அடுத்த செய்யுள் விரிவுரையிற் காண்க.
 

( 48 )

 

2117. ஈடிலர் வெகுளி யுள்ளிட் 1டெண்மரை 2யெறியத் தீயுட்
பேடுவந் தொன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை
ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா ளுழையவ ரறுவர் பட்டார்
ஆடவன் றானும் போழ்து கழித்துவந் தொருவ னாழ்ந்தான்.
 
     (இ - ள்.) ஈடு இலர் வெகுளி உள்ளிட்டு எண்மரை - தமக்கு ஒப்பில்லாதவராகிய
அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, பேடு ஒன்று மாய்ந்து வந்து முடிந்தது -
ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்தது, முடிந்த பின்னை -
அப்பேடி மாய்ந்தவுடன், ஓடிவந்து - விரைந்து தன்மேற் போர் ஆற்ற வந்து, ஒருத்தி -
ஒருமகள், வீழ்ந்தாள் - இறந்துபட்டாள், உழையவர் - அவளுக்கு அணுக்கராகிய, அறுவர்
பட்டார் - ஆறு வீரர்கள் பின்னர்ப் போர் ஆற்றி மாண்டனர், ஆடவன்றானும் ஒருவன் -
ஒரு மறவனும், போழ்து கழித்து - சிறிதுகாலம் தாழ்த்து வந்து போர்செய்து,
ஆழ்ந்தான்-ஒழிந்தான், தான் : அசை, (எ - று.)

     ஈடிலர் வெகுளி யுள்ளிட்டு எண்மர் என்றது:- அப்ரத்கியாக்யான குரோதமான மாயா,
லோபம் நான்கும், பிரத்தியாக்யான, குரோதமான மாயா, லோப நான்குமாகிய எட்டுமாம்.
பேடு - நபும்சகவேதம். ஒருத்தி - ஸ்திரீவேதம். ஆடவன் - புருடவேதம். அறுவர்,
ஆஸ்யைரதி, அரதி சோகம் பயம் சுகுப்ஸை என்பன. இவ்வொன்பதும் நொகஷாயம் என்று
கூறப்படும்.
 

( 49 )

 
2118. பின்னுமோர் நால்வர் தெவ்வர்
     முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்மு ளானே
     குறைப்பிண மொருவ னாகித்
தன்னைமெய் பதைப்ப நோக்கி
     யவனையுந் 3தபுப்ப நோனார்
துன்னிய துயிலு மேனைத்
     துளக்கஞ்செய் திருவர் பட்டார்.
 
 

     (பாடம்) 1 டெண்மரு. 2 மெறிந்து. 3தவிர்ப்ப.