பக்கம் : 139
 

கண்மலர்

177.

காவியுஞ்செங் கழுநீருங் கமலமுங் 1கண் விரிந்துநளி
வாவியு 2மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
3தூவியருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் 4துள் ளாராத லரிதேயிவ் விள 5வேனில்.
 

     (இ - ள்.) தூவி - இறகினையுடைய, அரும் கிளி அன்ன - அரிய கிளியைப்
போன்ற; சொல்லினீர் - சொற்களையுடைய பெண்காள்!; (நான் கூறுவதைக் கேளுங்கள்) நளி
வாவியும் - குளிர்ச்சியுடைய தடாகத்திடமும்; மண்டபம் - நீராழி மண்டபத்திடமும்;
காவியும் - குவளையும்; செங்கழு நீரும் - ஆம்பலும்; கமலமும் - தாமரையும்; கண்விரிந்து
- உங்களுடைய கண்களைப்போல மலர்ந்து; எழில் மதனனையும் மருட்டும் - அழகிய
காமனையும் மருளச்செய்வதாக விளங்குகின்றன ஆதலால்; இவ் இளவேனில் - இந்த
இளவேனிற் காலத்திலே; துணையில்லார் - (ஆடவர் மகளிர் என்பார் தத்தம்
காதலுக்குரியவராகிய) துணையினைப் பெற்றிராதார்; ஆவி உய்ந்துள்ளார் ஆதல் அரிது-உயிரோடு பிழைத்திருப்பவராதல் அரிது. (எ- று.)

     இளவேனிற் காலத்தில், காமவேட்கையை மிகுவிக்கக் கூடிய மலர்கள் மிகுதியாக
மலர்ந்து; அழகிய காமனையும் மயங்கச்செய்வதாக விளங்கு கின்றமையின்,
காதலுக்குரியாரைப் பிரிந்து தனித்திருப்போர் உயிர்கொண்டு வாழ்தல் அருமை, என்று
அரசன் தன் மனைவியர்க்கு உணர்த்தினான்.

( 59 )

வேறு

அரசன் திருக்கோயிலை அடைதல்

178. இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் 6கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்.

 


     (பாடம்) 1 கண் விரிந்து வாவியு. 2. மண்டபமும் - மதனனையும். 3. தூவியங்
கிளியன்ன. 4. உளராதல். 5. வேனல். 6. காடவட் காக்கிய.